பெட்ரோல் பங்குகளில் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி தினசரி 2,000 ரூபாய் பணம் பெற்றுக் கொள்ள SBI வங்கி நடவடிக்கை எடுத்துள்ளது.
இதுதொடர்பாக நேற்றிரவு வெளியான அறிவிப்பில், இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய 3 எண்ணெய் நிறுவனங்களுடன் SBI வங்கி உடன்படிக்கை செய்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி நாடு முழுவதும், SBI வங்கியின் point of sale மெஷின் உள்ள 2,500 பெட்ரோல் பங்குகளில், டெபிட் அல்லது கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி வாடிக்கையாளர்கள் தினசரி 2,000 ரூபாய் பணத்தை ரொக்கமாக பெற்றுக் கொள்ளலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. விரைவில் இந்த வசதி, நாடு முழுவதும் உள்ள 20,000 பெட்ரோல் பங்குகளுக்கு விரிவுபடுத்தப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை மத்திய அரசு திரும்ப பெற்றதை தொடர்ந்து நாடு முழுவதும் வங்கிகளிலும், ATM-களிலும் கூட்டம் அலைமோதுகிறது. வங்கிகளும், தபால்நிலையங்களும் மக்களிடம் உள்ள பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
எனினும் கறுப்பு பணம் மாற்றப்படுவதை தவிர்க்கவும், முறைகேடுகளை களையவும், நிதியமைச்சகம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. இந்நிலையில், மக்கள் மத்தியில் பணப்புழக்கத்தை அதிகரிக்கும் நோக்குடன் பெட்ரோல் பங்குகளில் பணம் பெறும் திட்டம் அறிமுகம் செய்யப்படுவதாக டெல்லி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
English Summary:
Debit and credit cards at petrol stocks daily using SBI bank has taken steps to obtain payment of 2,000 rupees.