நட்புறவு:
விழாவில் தெரசா மே பேசியதாவது: இந்திய முதலீடு காரணமாக பிரிட்டன் பொருளாதாரம் நன்கு உயர்ந்துள்ளது. இந்தியா இங்கிலாந்து இடையிலான உறவில் சிறப்பான பிணைப்பு உள்ளது. இதற்கு எல்லை கிடையாது. இரு நாடுகளுக்கு இடையே சிறந்த நட்புறவு உள்ளது என்றார்.
இங்கிலாந்துக்கு அதிக பலன்:
பின்னர் பிரதமர் மோடி பேசியதாவது: கடந்த 5 ஆண்டுகளில், இந்தியா இங்கிலாந்து இடையிலான வர்த்தகத்தில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. இங்கிலாந்தில் அதிக முதலீடு செய்த நாடுகளில் இந்தியா 3வது இடத்தில் உள்ளது. பொருளாதாரத்தில், இந்தியா வேகமாக வளர்ந்து வருகிறது. சர்வதேச சவால்களை எதிர்கொள்ள இந்தியாவும், இங்கிலாந்தும் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். சோலார் சக்தி குறித்து, சுத்தமான எரிசக்தி ஆராய்ச்சி மற்றும் ஆய்வு மையம் அமைக்க இரு தரப்பும் ஒப்புக்கொண்டுள்ளது. இந்த மாநாடு, இரு நாடுகளுக்கு இடையேயான அறிவியல் அறிவு மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லும். ஐரோப்பாவிற்கு வெளியே முதல் சுற்று பயணமாக தெரசா மே இந்தியா வந்தது மகிழ்ச்சியளிக்கிறது. பாதுகாப்பு துறை, உற்பத்தி மற்றும் வான்வெளித்துறையில், இந்தியா அன்னிய முதலீட்டு விதிகளை தளர்த்தியதில் இங்கிலாந்திற்கு அதிக பலன் அளிக்கும் எனக்கூறினார்.