புதுடில்லி: கடந்த அக்டோபர் மாதம் பாகிஸ்தான் பத்திரிகையாளர் சிரில் அல்மீடியா என்பவர், அரசுக்கும் ராணுவத்திற்கும் இடையே மோதல் உள்ளதாக செய்தி வெளியிட்டார். இதனையடுத்து அவர் நாட்டை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டது. இது இந்தியா உள்ளிட்ட பல நாடுகளிலும் பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால், இந்தியாவிலும் பத்திரிகை செயல்பாட்டிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. காஷ்மீர் கலவரத்தை தொடர்ந்து, கடந்த ஜூலை மாதம் பத்திரிகை வெளியிட தடை விதிக்கப்பட்டது. இதற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியதை தொடர்ந்து 3 நாட்களில் திரும்ப பெறப்பட்டது. கடந்த அக்டோபர் மாதம், ஸ்ரீநகரிலிருந்து வெளியாகும், காஷ்மீர் ரீடர் என்ற பத்திரிகை வெளியாக தடை விதிக்கப்பட்டது.
மோசமான நிலை:
பத்திரிகை சுதந்தரம் குறித்த குறீயீட்டு எண் பட்டியலில் இந்தியாவின் நிலை மோசமாக உள்ளது. இந்த பட்டியலில் பின்லாந்து முதலிடத்தில் உள்ளது.
*இங்கிலாந்து 38 வது இடத்தில் உள்ளது.
*அமெரிக்கா 41வது இடத்தில் உள்ளது.
*பூடான் 94வது இடத்தில் உள்ளது.
*நேபாளம் 105வது இடத்தில் உள்ளது.
*இந்தியா 133வது இடத்தில் உள்ளது.
*பாகிஸ்தான் 147 வது இடத்தில் உள்ளது.
*சீனா 176வது இடத்தில் உள்ளது.
இந்த பட்டியலில் 180 நாடுகள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டன.
10வது இடம்:
பத்திரிகையாளர்கள் அதிகம் பேர் இறப்பது தொடர்பான பட்டியலிலும் இந்தியா முதல் 10 இடத்தில் உள்ளது. இந்த பட்டியல் 1992 முதல் 2016 வரை கணக்கில் எடுத்து கொள்ளப்பட்டுள்ளது.
1.ஈராக்கில் 175 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுனர்.
2.சிரியாவில் 101 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுனர்.
3.பிலிப்பைன்சில் 77 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
4.அல்ஜீரியாவில் 60 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
5.சோமாலியாவில் 59 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
6.பாகிஸ்தானில் 59 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
7.ரஷ்யாவில் 56 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
8.கொலம்பியாவில் 47 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
9.இந்தியாவில் 40 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
10.பிரேசிலில் 39 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
தண்டனை இல்லை:
கடந்த 1992ம் ஆண்டு முதல் 2016 ஜூலை வரை இந்தியாவில் 40 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்ட நிலையில், இந்த சம்பவத்தில் யாருக்கும் தண்டனை வழங்கப்படவில்லை. அதேநேரத்தில், பலியான பத்திரிகையாளர்களில் 56 சதவீதம் பேர் மீது முறைகேடு புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
பத்திரிகையாளர்கள் முன் உள்ள சவால்:
இந்தியாவில் பத்திரிகையாளர்களுக்கு உள்ள சவால்களாக இந்த பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள விஷயங்கள்.
* சில மதவாத சக்திகளால், பத்திரிகையாளர்கள் தொடர்ந்து தாக்குதலுக்கு ஆளாகின்றனர்
* காஷ்மீர் உள்ளிட்ட பதற்றமிக்க பகுதிகளில், பத்திரிகையாளர்கள் செய்தி சேகரிக்க முடியவில்லை
* மீடியா மீது அரசு ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
* பத்திரிகையாளர்களை பாதுகாப்பு குறித்த விஷயத்தில் நடவடிக்கை இல்லை.
அதேநேரத்தில், சென்சார் செய்யாமல் செய்தி வெளியிட மீடியாவுக்கு உரிமை உள்ளது என இந்தியாவில் 44 சதவீதம் பேர் மட்டுமே ஆதரவு தெரிவித்துள்ளனர். ஆனால் இது சர்வதேச அளவில் 56 சதவீதமாக உள்ளது.