ஈராக் நாட்டின் மொசூல் நகரின் தென்பகுதியில் உள்ள கய்யாரா நகர எண்ணெய் கிணறுகளில் தீ பற்றி எரிவதால் எங்கும் புகைமயமாக உள்ளது.
ஈராக் நாட்டின் மொசூல் நகருக்குத் தெற்கில் உள்ள கய்யாரா அருகே எண்ணெய் கிணறுகளில் தீவிரவாதிகள் தீவைத்துத் தப்பிச் சென்றனர். இதனால் பல கிலோ மீட்டர் பரப்பளவில் தீ எரிந்து வருகிறது.
இதிலிருந்து வெளியேறும் புகையால் அப்பகுதி மக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். பொதுமக்களால் வளர்க்கப்படும் ஆடுகள் உள்பட கால்நடைகள் கருப்பு நிறத்தில் காட்சியளிக்கின்றன.
புற்கள் உள்ளிட்ட அனைத்தும் கரி பிடித்து இருப்பதால் கால் நடைகள் அதிக அளவில் உயிரிழந்து வருகின்றன. மேலும் பொதுமக்களும் பல்வேறு உடல் நலக்கோளாறுகளால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இப்பகுதியில் உள்ள மருத்துவமனையும் குண்டு வைத்து தகர்க்கப்பட்டதால் ஏராளமான பொதுமக்கள் சிகிச்சை கிடைக்காமல் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.