டெல்லி: ஒரே பதவி ஒரே ஓய்வூதியம் என்பது பணம் மட்டுமல்ல, நீதி சம்பந்தப்பட்டது என காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். டெல்லியில் முன்னாள் ராணுவ வீரர்களை சந்தித்து பேசிய பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு கூறினார். ராணுவத்தினரையும், விவசாயிகளையும் மத்தியில் ஆளும் மோடி தலைமையிலான பாரதிய ஜனதா அரசு மதிக்கவில்லை என கடுமையாக சாடியுள்ளார். முன்னாள் ராணுவத்தினருக்கு நியாயமாக கிடைக்க வேண்டியதை அரசு கொடுக்கவில்லை என்றார்.
மேலும் பேசிய அவர் தற்கொலை செய்து கொண்ட ஓய்வு பெற்ற ராணுவ வீரரின் குடும்பத்தினரை சந்திக்க சென்றதற்காக, தம்மை கைது செய்தது பற்றி கவலைப்படவில்லை என்றார். ஒரே பதவி ஒரே ஓய்வூதியம் திட்டம் குறித்து மேலும் மேலும் பொய் சொல்வதை பிரதமா் மோடி நிறுத்திக் கொள்ள வேண்டும் என ராகுல் கூறினார். மேலும் தற்கொலை செய்து கொண்ட முன்னாள் ராணுவ வீரர் ராம்கிஷன் குடும்பத்திடம் மத்திய அரசு மன்னிப்பு கேட்க வேண்டும் என்றார்.
இவ்விகாரம் குறித்து பேசிய மற்றொரு காங்கிரஸ் தலைவரான ஏ.கே.அந்தோணி ஒரே பதவிக்கு ஒரே ஓய்வூதியம் என்ற வாக்குறுதியை செயல்படுத்த மத்திய அரசு தவறிவிட்டதாக சாடினார். முன்னாள் படை வீரர்களின் ஓய்வூதிய பிரச்சனையை தீர்ப்பதாக காங்கிரஸ் அரசு வாக்குறுதி அளித்திருந்தது. இதனால் அதை நிறைவேற்ற வேண்டிய கட்டாயம் தற்போதைய பாரதிய ஜனதா அரசுக்கு ஏற்பட்டது. ஆனால் முறையாக திட்டத்தை செயல்படுத்தாத காரணத்தால் முன்னாள் படை வீரர்களை மத்திய அரசு ஏமாற்றிவிட்டதாக குற்றம்சாட்டியுள்ளார்.
Friday 4 November 2016
Home »
» ராணுவத்தினரையும், விவசாயிகளையும் மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசு மதிக்கவில்லை : ராகுல் குற்றச்சாட்டு