500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்ற மத்திய அரசின் அறிவிப்பால் கேரளத்தில் கூட்டுறவு வங்கிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையில் போராட்டம் நடைபெற்றது.
திருவனந்தபுரத்தில் உள்ள ரிசர்வ் வங்கி அலுவலகம் முன்பாக நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், அம்மாநில அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். கேரள பொருளாதாரத்தின் முக்கிய அங்கமாக மாநில கூட்டுறவு வங்கிகள் உள்ளதாகக் குறிப்பிட்ட பினரயி விஜயன், அவற்றை அழிக்கும் நோக்கம் கொண்டதாக மத்திய அரசின் செயல்பாடு உள்ளது எனவும் குற்றம் சாட்டினார்.
இந்த போராட்டம் தொடக்கம்தான் எனத் தெரிவித்த பினராயி விஜயன், மத்திய அரசின் முடிவுக்கு கேரள அரசு தனது எதிர்ப்பை தொடர்ந்து பதிவு செய்யும் என்றும் கூறினார். இவ்விவகாரம் குறித்து விவாதிப்பதற்காக வரும் 21ம் தேதி கேரளாவில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
English Summary:
500 and 1000 notes invalid, the Fed's announcement in Kerala cooperative banks severely affected, saying the Chief Minister Pinarayi Vijayan led the fight took place.