எனது மத நம்பிக்கை என்பது எனது தனிப்பட்ட விஷயம், இதில் யாரும் தலையிட முடியாது என்று உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்குர் தெரிவித்தார்.
"தற்காலத்தில் ஜொராஷ்டிர மதத்தைச் சார்த்து வாழும் உள்முக சக்தி, நம்பிக்கை, வாய்ப்பு' என்ற தலைப்பிலான புத்தகத்தின் வெளியிட்டு விழா தில்லியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. உச்ச நீதிமன்ற நீதிபதி ரோஹின்டன் எப்.நாரிமன் எழுதிய இப்புத்தகத்தை வெளியிட்டு டி.எஸ்.தாக்குர் பேசியதாவது:
மனிதர்களுக்கும், அவர்கள் நம்பி வழிபடும் கடவுளுக்கும் இடையிலான உறவு மிகவும் தனிப்பட்டது. இதில் யாரும் தலையிட முடியாது. நமது சமூகத்தில் சகிப்புத்தன்மையும், அமைதியும் நிலவ வேண்டும்.
அரசியல் மோதல்களைவிட மதரீதியிலான பிரச்னைகளால் நமது நாட்டில் அதிக உயிர்கள் பலியாகின்றன. நமது நாட்டில் மட்டுமல்ல, இப்போது உலகத்திலேயே அதிக உயிரிழப்பு ஏற்படுவது மதரீதியிலான பிரச்னைகளால்தான். தங்கள் மதநம்பிக்கையே உயர்ந்தது என்ற கூறி மனிதர்கள் ஒருவரை மற்றொருவர் கொலை செய்யவும் துணிந்துவிட்டனர்.
எனது மதம் என்ன?, நான் எப்படி எனது கடவுளை வழிபடுகிறேன்? என்பது எனது தனிப்பட்ட விஷயம். இதில் வேறு யாரும் தலையிட முடியாது. அனைத்து மதங்களும் வெவ்வேறு வழிகளில் இறைவனை அடையவே வழிகாட்டுகின்றன என்பதை உணர்ந்தால்தான் உலகில் அமைதி நிலவும். வளர்ச்சி ஏற்படும். இந்தப் பணியில் இப்புத்தக ஆசிரியர் ரோஹின்டன் சிறப்பான பங்களிப்பை ஆற்றியுள்ளார் என்றார் அவர்.
English Summary : No one can interfere with my religious faith: T.S.Takkur.humans, they rely on the worship of God and the relationship between the very private. this one does not interfere. our society of tolerance, peace should prevail.