நிலையில் பயணச்சீட்டு இல்லாமல் பயணம் செய்வதை தவிர வேறு வழியில்லை என ரயில் பயணிகள் தெரிவித்துள்ளனர்.
500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்ட நிலையில் ரயில் நிலையங்களில் இந்த நோட்டுகளை அளிக்கலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் பயணச்சீட்டு எடுக்க வரும் பயணிகள் பெரும்பாலும் 500, 1000 ரூபாய் தாள்களை கொண்டு வந்த வண்ணம் உள்ளனர். இதன் காரணமாக மீதித்தொகையை அளிக்க முடியாத நிலையில் பயணச்சீட்டு வழங்கும் ஊழியர்கள் தவிக்கும் சூழல் காணப்படுகிறது.
வெளியூரிலிருந்து வந்த பயணிகள் பலர், தங்களுக்கு இந்த தகவல் காலையில்தான் தெரிய வந்ததாகவும், பயணச்சீட்டு பெற நூறு ரூபாய் தாள்கள் இல்லாததன் காரணமாக தாங்கள் அடுத்து என்ன செய்வதென்றே தெரியாமல் தவிப்பதாக கவலை தெரிவித்தனர்.