சென்னை:ரூபாய் நோட்டு தட்டுப்பாடு காரணமாக டாஸ்மாக் கடைகளில் கடைகளில் டெபிட்/கிரெடிட் ஸ்வைப் மெஷினைக் கொண்டு வர திட்டமிட்டுள்ளதாக டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ரூபாய் நோட்டு விவகாரம் நாடு முழுவதும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதன் காரணமாக பல்வேறு தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன. சில்லரை வியாபாரிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இன்னும் பணப்புழக்கம் சரியாகததால் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.
இதனிடையே டாஸ்மாக்கில் மதுபான விற்பனையும் கடுமையாக சரிவடைந்துள்ளது. இதனை சரி செய்யும் வகையில் டாஸ்மாக் கடைகளில் டெபிட்/கிரெடிட் கார்ட்டுகளை கொண்டு வர டாஸ்மாக் நிர்வாகம் முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது .
பணப்புழக்கத்தில் ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு மற்றும் சபரிமலை சீசன் காரணமாக டாஸ்மாக் கடைகளின் விற்பனை நாளொன்றுக்கு 12 கோடி ரூபாய் அளவுக்கு குறைந்துள்ளது. டாஸ்மாக் கடைகளில் வார நாட்களில் சராசரியாக 85 கோடி ரூபாய் வரையும், சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில் 100 கோடி ரூபாய் அளவுக்கு மதுவிற்பனை இருக்கும். இந்த விற்பனை தற்போது நாளொன்றுக்கு சராசரியாக 12 கோடி ரூபாய் அளவுக்கு குறைந்துள்ளது.
இதனால் டாஸ்மாக் கடைகளில் டெபிட்/கிரெடிட் கார்ட் ஸ்வைப் மெஷின் கொண்டு வருவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாக டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தற்போது 'எலைட்' மதுபான கடைகளிலும், 'டாஸ்மாக்' நிறுவனத்தின் அனுமதியோடு ஓட்டல்களில் இயங்கும் மதுபான பார்களிலும் 'ஸ்வைப் மெஷின்கள்' பயன்பாட்டில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary:
Demonetisation: Credit, debit Card Machine will be used in tasmac shops, sources aid