நான்கு நாட்கள் கொண்ட ஆஸ்திரேலியாவின் உள்ளூர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரான ‘ஷெபீல்டு ஷீல்டு’ இன்று தொடங்கியது. பிரிஸ்பேனில் தொடங்கிய போட்டியில் குயின்ஸ்லாந்து - தெற்கு ஆஸ்திரேலியா அணிகள் மோதின. டாஸ் வென்ற தெற்கு ஆஸ்திரேலியா அணி பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி குயின்ஸ்லாந்தின் ரென்ஷாவ் மற்றும் பர்ன்ஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள்.
பர்ன்ஸ் 4 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். அடுத்து கவாஜா களம் இறங்கினார். இந்த ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இருவரும் சதம் அடித்து அவுட் ஆனார்கள். ரென்ஷாவ் 108 ரன்னும், கவாஜா 106 ரன்களும் எடுத்தனர்.
கவாஜா ஆஸ்திரேலியாவின் சர்வதேச அணியில் இடம்பிடித்துள்ளார். ஆஸ்திரேலியா அணி கடந்த ஐந்து டெஸ்டுகளை தொடர்ச்சியாக தோற்றுள்ளது. இந்த ஐந்து போட்டிகளில் நான்கில் கவாஜா இடம்பிடித்திருந்தார். இதில் அவர் பெரிய அளவில் ஆதிக்கம் செலுத்தவில்லை. ஆனால் உள்ளூர் போட்டியில் சதம் அடித்துள்ளார். முதல் நாள் ஆட்ட முடிவில் குயின்ஸ்லாந்து 5 விக்கெட் இழப்பிற்கு 338 ரன்கள் குவித்துள்ளது.
Summary: International competition comes botched Sheffield Shield kavaja local series scored a century in the series.