நாகர்கோவில் : தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது. ரோட்டில் நடமாட முடியவில்லை என்று பாஜ மாநில தலைவர் தமிழிசை கூறினார். பா.ஜ மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நேற்று நாகர்கோவிலில் நடந்த டாக்டர்கள் மாநாட்டில் கலந்து கொள்ள வந்தார். முன்னதாக பா.ஜ மாவட்ட அலுவலகத்தில் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி : தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பா.ஜ தலைவர்கள் பிரசாரம் செய்யவுள்ளனர். அரவக்குறிச்சி, தஞ்சையில் தற்போது பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. நுனிப்புல் மேயப்பட்டு இருக்கிறதா? என்ற சந்தேகம் உள்ளது. தேர்தல் ஆணையம் நடுநிலையோடு நடத்த வேண்டும்.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கவலையாக உள்ளது. ரோட்டில் நடமாடமுடியவில்லை. வீட்டில் தனியாக இருக்கமுடியவில்லை. சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதில் மிக கவனத்தை செலுத்தவேண்டும். தமிழகத்தில் இந்து சமுதாயத்தை சேர்ந்தவர்கள் தாக்கப்படுவதும், அவர்கள் மீது பொய்வழக்கு போடுவதும் அதிகரித்து வருகிறது. காவல்துறை இதனை கட்டுக்குள் கொண்டுவரவேண்டும். தமிழகத்தில் விவசாயிகள் வாழ்வதற்குரிய சூழல் மோசமாக உள்ளது என்று கருத்து கணிப்புகள் தெரிவிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.