கமல் நடிப்பில் வெளிவந்த ‘உத்தமவில்லன்’, ‘தூங்காவனம்’, ‘பாபநாசம்’ ஆகிய படங்களுக்கு இசையமைத்தவர் ஜிப்ரான். தற்போது கமல் நடிப்பில் உருவாகியுள்ள ‘விஸ்வரூபம்-2’ படத்திறகும் இவர்தான் இசையமைப்பாளர். கோலிவுட்டில் தொடர்ந்து ஹிட் பாடல்களை கொடுத்துவரும் ஜிப்ரான், தற்போது ஹாலிவுட்டிலும் தடம் பதிக்கவுள்ளார்.
அதுவும் அர்னால்டு ஸ்வாசர்னேகர் நடிக்கும் படத்திற்கு இசையமைக்கப் போகிறார் என்றால் எல்லோரும் பெருமைப்படக்கூடிய விஷயம்தான். தமிழின் பழம்பெரும் இயக்குனரான மித்ர தாஸ் தனது 101-வது பிறந்தநாளை கொண்டாடினர். இவ்வளவு வயதாகிவிட்டாலும், அவருக்கு சினிமா மீதான ஆர்வம் மட்டும் குறையவே இல்லை.
இந்நிலையில், முதலாம் உலகப்போரை மையப்படுத்தி ஹாலிவுட்டில் அந்தோணி மித்ரதாஸ் புதிய படமொன்றை இயக்க போகிறாராம். இந்த படத்தில் முழுக்க முழுக்க ஹாலிவுட் நடிகர்கள்தான் நடிக்கப்போவதாக கூறப்படுகிறது. இதில், அர்னால்டு ஸ்வாசர்னேகரும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த படத்திற்குதான் ஜிப்ரான் இசையமைக்க ஒப்பந்தமாகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இயக்குனர் மித்ரதாஸ் முதல் உலகப்போர் நடந்துகொண்ட சமயத்தில் பிறந்தவர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு கூடிய விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Summary: Arnold jipran musical film?