தமிழக சட்டபை தேர்தலை விட பாண்டிச்சேரியில் நடைபெற உள்ள சட்டசபை இடைத்தேர்தல் அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. முதல்வர் நாராயணசாமி தொடர்ந்து முதல்வராக நீடிப்பாரா என்பதை தீர்மாணிக்கும் தேர்தல் இது.
தேர்தலில் போட்டியிடாமலே முதல்வராகி இருக்கும் நாராயணசாமிக்காக நெல்லித்தோப்பு சட்டமன்ற உறுப்பினர் ராஜினாமா செய்தார். இந்த தொகுதியில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராகி முதல்வர் பதவியை தக்கவைக்க நாராயணசாமி களம் இறங்கியுள்ளார்.
இவரை எதிர்க்க வலிமையான போட்டியாளராக மாறியுள்ளார் அதிமுகவின் ஓம்சக்தி சேகர். ஓட்டுக்கள் சிதறினால் நாராயணசாமி வெற்றி பெற்றுவிடுவார் என எ.ஆர்.காங்கிரஸ் தலைவர் முன்னாள் முதல்வர் ரங்கசாமி தானாக முன்வந்து அதிமுகவுக்கு ஆதரவு அளித்தார்.
இதனை தொடர்ந்து பாஜகவும் தங்கள் ஆதரவை அதிமுகவுக்கு அளிப்பதாக தானாக முன்வந்து கூறியது. ஆனால் அதிமுக சார்பில் தேர்தல் பொறுப்பாளர்களாக போடப்பட்டுள்ள தமிழக அமைச்ச்சர்கள் தங்களுக்கு ஆதரவு தெரிவித்த எ.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமியை சந்தித்து ஆதரவுக்கு நன்றி தெரிவித்தனர்.
மேலும் பிரச்சாரம் செய்யும் இடங்களில் அதிமுக கொடுகளுடன் என்.ஆர்.காங்கிரஸ் கொடியும் சேர்த்து பயன்படுத்தப்படுகிறது. ஆனால் பாஜக தலைவர்களை சந்திக்கவும், ஆதரவு கொடுத்ததற்கு எந்த நன்றியும் கூறவில்லை.
ஆதரவு தெரிவித்த பாஜகவுடன் எந்த தொடர்பும் இல்லாமல் தேர்தல் பணிகளை செய்கின்றனர் அதிமுகவினர். இதனால் பாஜகவின் அதிருப்தியடைந்துள்ளனர். தேடிச்சென்று ஆதரவு கொடுத்தும் நம்மை உதாசினப் படுத்திவிட்டது அதிமுக. இதனால் பாண்டிச்சேரி தலைமை மீது புகார் தெரிவித்து தேசிய தலைமைக்கு மற்ற பாஜக நிர்வாகிகள் கடிதம் எழுதியுள்ளதாக கூறப்படுகிறது.