புதுடில்லி : திருமணம் வைத்திருப்போர், அதன் செலவிற்காக வங்கிகளில் இருந்து ரூ.2.5 லட்சம் வரை எடுத்துக் கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இது நாளை (நவம்பர் 21) முதல் அமலுக்கு வர உள்ளது.
ரூ.500, 1000 நோட்டுக்களை வாபஸ் பெற்ற பிறகு, வங்கிகளில் இருந்து எடுக்கப்படும் பணத்திற்கும் மத்திய அரசு கட்டுப்பாடு விதித்தது. இதனால் திருமணம் வைத்திருப்போர் கடுமையாக பாதிக்கப்படுவதாக ரிசர்வ் வங்கிக்கு தெரிய வந்தது. இதனையடுத்து, திருமணம் வைத்திருப்போர் அடுத்த வாரம் முதல் வங்கிகளில் ரூ.2.5 லட்சம் வரை எடுத்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது.
இந்த நடைமுறை நாளை அல்லது நாளை மறுநாள் அனைத்து வங்கி கிளைகளிலும் அமலுக்கு வர உள்ளது. திருமணத்திற்கு பணம் எடுப்போர் ஒன்று மணமக்களின் பெற்றோர் அல்லது திருமணம் செய்து கொள்ள போகிறவராக தான் இருக்க கூடும். அதனால் திருமணம் செய்து கொள்பவர் அல்லது அவர்களின் பெற்றோர் யாராவது ஒருவர் மட்டுமே பணம் எடுத்துக் கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், மாப்பிள்ளை வீட்டார் ரூ.2.5 லட்சமும், பெண் வீட்டார் ரூ.2.5 லட்சமும் எடுத்துக் கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ரிசர்வ் வங்கியால் அறிவுறுத்தப்படாத வங்கிகளில் இவ்வாறு பணம் பெற்றுக் கொள்ள முடியாது. இவ்வாறு திருமணத்திற்காக பணம் எடுப்பதை உறுதி செய்ய பல வழிமுறைகள் இருப்பதாகவும் வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
English Summary:
Holders of marriage, the expenses of Rs 2.5 lakh from banks has allowed the federal government to take over. It's tomorrow (November 21) is the first to come into effect.