இங்கிலாந்துக்கு எதிரான முதலிரண்டு டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் காம்பிர், பாண்ட்யா, இஷாந்த் உள்ளிட்டோர் இடம்பிடித்துள்ளனர்.
இந்தியா வரும் இங்கிலாந்து அணி ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி ராஜ்கோட்டில் வரும் 9ல் துவங்குகிறது. இத்தொடரின் முதலிரண்டு போட்டிக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியை எம்.எஸ்.கே.பிரசாத் தலைமையிலான தேர்வுக்குழு மும்பையில் இன்று தேர்வு செய்தது.
மீண்டும் காம்பிர்:
இதில், நியூசிலாந்து டெஸ்ட் தொடரின் கடைசி போட்டியில் விளையாடிய 'சீனியர்' வீரர் காம்பிர் மீண்டும் இடம் பிடித்துள்ளார். 'ஆல்-ரவுண்டர்' ஹர்திக் பாண்ட்யா வாய்ப்பு பெற்றுள்ளனர். துவக்க வீரர் ஷிகர் தவான், ரோகித் சர்மா காயம் காரணமாக இடம்பெறவில்லை. சிக்குன் குனியா காய்ச்சலில் இருந்து மீண்டுள்ள வேகப்பந்துவீச்சாளர் இஷாந்த் அணிக்கு திரும்பியுள்ளார். மற்றபடி, சுழற்பந்துவீச்சாளர் அஷ்வின், ஜடேஜா, அமித் மிஸ்ரா, முரளி விஜய் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.
அணி விவரம்:
விராத் கோஹ்லி (கேப்டன்), அஷ்வின், காம்பிர், ஜடேஜா, மிஸ்ரா, ஷமி, புஜாரா, ரகானே, சகா, கருண் நாயர், முரளி விஜய், உமேஷ், ஹர்திக் பாண்ட்யா, இஷாந்த், ஜெயந்த் யாதவ்.
Wednesday 2 November 2016
Home »
» இந்திய அணி அறிவிப்பு: மீண்டும் காம்பிருக்கு வாய்ப்பு
இந்திய அணி அறிவிப்பு: மீண்டும் காம்பிருக்கு வாய்ப்பு
Location:
Mumbai, Maharashtra, India