இந்தியா - இங்கிலாந்து இடையேயான முதல் கிரிக்கெட் டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டில் தொடங்கியுள்ளது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது. இந்திய அணியில் 5 பந்துவீச்சாளர்கள் இடம்பெற்றுள்ளார். பாண்டியா, கருண் நாயர் ஆகிய இருவருக்கும் அணியில் இடம் கிடைக்கவில்லை.
கடந்த 30 ஆண்டுகளில், இந்தியாவில் முதல்முறையாக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடத்தப்படுகிறது. அதேபோல், ராஜ்கோட் மைதானத்தில் நடத்தப்படும் முதல் டெஸ்ட் போட்டி இதுவாகும். இதுதவிர, இந்தியாவில் நடத்தப்படும் டெஸ்ட் தொடர்களிலேயே முதல் முறையாக, இந்தத் தொடரில் "டிஆர்எஸ்' எனப்படும், நடுவர் தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்யும் முறை சோதனை அடிப்படையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த 2012, 2014-ஆம் ஆண்டுகளில் இங்கிலாந்து அணியிடம் டெஸ்ட் தொடரில் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுக்கும் முனைப்பில் இந்திய அணி களமிறங்கியுள்ளது.
ஆரம்ப ஓவர்களில் இந்திய ஃபீல்டர்கள் அடுத்தடுத்து கேட்சுகளைக் கோட்டைவிட்டார்கள். இதனால் இங்கிலாந்து அணிக்குச் சாதகமான நிலை உருவாகுமா என்று தோன்றியது. கடந்தமுறை அசத்தலாக ஆடிய குக், இந்தத் தொடரின் முதல் டெஸ்டில், 21 ரன்களில் ஜடேஜா பந்துவீச்சில் எல்பிடள்யூ முறையில் ஆட்டமிழந்தார். டிஆர்எஸ் முறையை அவர் பயன்படுத்தியிருந்தால் தப்பித்திருப்பார். ஆனால் அவர் அதைச் சரியாகக் கணிக்க மறந்துவிட்டார்.
இதையடுத்து அஸ்வின் தனது திறமையை அற்புதமாக வெளிப்படுத்தினார். ஹசீப் ஹமீதும் எல்பிடபிள்யூ முறையில் அஸ்வினிடம் 31 ரன்களில் வீழ்ந்தார். ஹசீப், நடுவரின் தீர்ப்புக்கு எதிராக டிஆர்எஸ் முறையைப் பயன்படுத்தினார். ஆனால், அதிலும் அவர் அவுட் என்றே அறிவிக்கப்பட்டது. அடுத்தச் சில ஓவர்களில் பென் டக்கெட் 13 ரன்களில் ரஹாவிடம் கேட்ச் கொடுத்து அஸ்வின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
உணவு இடைவேளையின்போது இங்கிலாந்து அணி 32.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 102 ரன்களை எடுத்தது. இதற்குப் பிறகு இந்திய அணி பந்துவீச்சில் ஆதிக்கம் செலுத்தும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நடந்ததோ வேறு. 4-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ஜோ ரூட்டும் மோயின் அலியும் இந்தியப் பந்துவீச்சை சிறப்பாக எதிர்கொண்டார்கள். விராட் கோலியின் திட்டங்கள் எதுவும் செல்லுபடியாகவில்லை. சற்று வேகமாக ஆடிய ரூட், 72 பந்துகளில் அரை சதம் எடுத்தார். 172 பந்துகளில் இந்தக் கூட்டணி 100 ரன்களை எடுத்து இங்கிலாந்து அணிக்குப் பெரும் உதவியாக இருந்தது. 61-வது ஓவரின்போது தசைப்பிடிப்பு காரணமாக ஷமி பாதி ஓவரிலேயே மைதானத்தை விட்டு வெளியேறினார். இதனால் இந்திய அணிக்குப் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. ரூட் 92 ரன்களில் இருந்தபோது விராட் கோலி எல்பிடபிள்யூ அப்பீல் கோரி டிஆர்எஸ் கோரிக்கை வைத்தார். ஆனால் மூன்றாவது நடுவர் கோலியின் கோரிக்கையை நிராகரித்தார்.
தேநீர் இடைவேளையின்போது 3 விக்கெட் இழப்புக்கு 209 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் உள்ளது இங்கிலாந்து அணி. ரூட் 92, மோயின் அலி 48 ரன்களில் களத்தில் உள்ளார்கள்.