சென்னை: புதிய ரூபாய் நோட்டுகளை பெறவும், பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவது குறித்தும் மக்களுக்கு உள்ள சந்தேகங்களை தீர்த்து கொள்ள ரிசர்வ் வங்கி ெஹல்ப் லைன் போன் எண்களை அறிவித்துள்ளது. சென்னையில் ரிசர்வ் வங்கியின் பிராந்திய இயக்குனர் சதக்துல்லா கூறியதாவது: தமிழகத்தில் உள்ள வங்கிகளுக்கு கரன்சி நோட்டுகளை சப்ளை செய்ய, ரிசர்வ் வங்கியின் 275 கரன்சி பெட்டகங்கள் தயார் நிலையில் உள்ளன. நேற்று மாலையே அனைத்து வங்கிகளுக்கும் கரன்சி சப்ளை செய்யப்பட்டுள்ளது.
ஒரு வாரத்துக்கு 20 ஆயிரம் :
வங்கிகளில் அடையாள அட்டையை காண்பித்து, விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து பழைய ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்யலாம். நாளை முதல் ஏ.டி.எம்.,களி்ல் ஒரு நாளைக்கு 2,000 ரூபாய், 19ம் தேதி முதல் 10 ஆயிரம் ரூபாய், ஒரு வாரத்துக்கு 20 ஆயிரம் ரூபாய்க்குள் பெற்றுக் கொள்ளலாம்.மக்கள்களுக்கு உள்ள சந்தேகங்களை தீர்த்து கொள்ள, 044 - 25381390, 25381392 என இரண்டு ஹெல்ப்லைன் போன் எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.