டோக்கியோ : பிரதமர் மோடியின் ஜப்பான் பயணத்தின் போது, இந்தியா- ஜப்பான் இடையேயான அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அணுசக்தி ஒப்பந்தம்:
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஜப்பான் பிரதமர் ஜின்சோ அபே இந்திய சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது வளர்ச்சித் திட்டங்களுக்கான அணுசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் ஏற்படுத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது. ஆனால் இதுவரை அந்த ஒப்பந்தம் கையெழுத்தாகவில்லை. இந்நிலையில், ஜப்பானுக்கு பிரதமர் மோடி வரும் 11, 12 ஆகிய தேதிகளில் பயணம் மேற்கொள்ளவுள்ளார். அப்போது, இந்திய-ஜப்பான் அணுசக்தி ஒப்பந்தம் 11ம் தேதி(நவ.,11) கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மோடியின் ஜப்பான் பயணம்:
இதுதொடர்பாக ஜப்பான் நாட்டுப் பத்திரிகையில் வெளியான செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது: இந்திய பிரதமர் மோடியின் டோக்கியோ பயணத்தின்போது இந்தியா-ஜப்பான் இடையே அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தாகும். இதன்படி, இந்தியாவுக்கு அணுசக்தி தொழில்நுட்பத்தை ஜப்பான் வழங்கும். அதேவேளையில், இந்தியா அணு குண்டு சோதனை நடத்தினால் இரு தரப்பு ஒத்துழைப்பு நிறுத்திக் கொள்ளப்படும் என்று இந்தியாவும், ஜப்பானும் ஒப்புக் கொண்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முதல் நாடு இந்தியா :
இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகும் பட்சத்தில், அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தில் கையெழுத்திடாமலேயே ஜப்பானுடன் இந்த ஒப்பந்தத்தைச் செய்து கொண்ட முதல் நாடாக இந்தியா விளங்கும். இரு நாடுகளுக்கும் இடையே பொருளாதாரம், பாதுகாப்பு ஆகிய துறைகளிலும் நல்லுறவு ஏற்படும். மேலும் அமெரிக்க நிறுவனங்கள் இந்தியாவில் அணு மின் நிலையங்களைத் தொடங்குவதும் சுலபமாகும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.