ஜெய்ப்பூர் : பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுகளை மத்திய அரசு திரும்பப்பெறுவதன் மூலம் பொருளாதார குற்றங்கள் தடுக்கப்படும் என யோகா குரு ராம்தேவ் தெரிவித்துள்ளார்.
சிறந்த முடிவு :
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடைபெற்ற விவசாய தொழில்நுட்ப மாநாட்டில் கலந்து கொண்ட யோகா குரு ராம்தேவ் பேசியதாவது: ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என, பிரதமர் மோடி நேற்று முன்தினம், அறிவித்தார். மிகச்சிறந்த முடிவான இது, ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும். இதன் மூலம் பொருளாதார குற்றங்கள் தடுக்கப்படும். அத்துடன் நக்சல் பயங்கரவாதத்துக்கான ஆதாரங்களும் தடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அறிக்கை:
ஐதராபாத்தில் ‛வாழும் கலை' அமைப்பின் நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் வெளியிட்ட அறிக்கையில் 500, 1000 ரூபாய் நோட்டுகளைத் திரும்பப் பெறும் திட்டத்தின் மூலம் ஊழலும், கருப்புப் பணமும், பயங்கரவாதமும் தடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.