டெல்லி சரோஜினி நகர் பகுதியில் உள்ள மார்க்கெட்டிற்கு, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி நேற்றிரவு திடீர் பயணம் மேற்கொண்டார்.
மத்திய அரசின் ரூபாய் நோட்டு மாற்றத்தால் பொது மக்கள், வணிகர்கள் என பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்பட்டதாக கூறப்படும் நிலையில், டெல்லி மார்க்கெட் பகுதி வியாபாரிகளுடன் ராகுல் காந்தி நேற்று சிறிது நேரம் கலந்துரையாடினார்.
நேற்றிரவு 9 மணியளவில் சரோஜினி நகர் மார்க்கெட் பகுதிக்குள் நுழைந்த ராகுல், சில்லறை பற்றாக்குறையால் வியாபாரிகள் சந்திக்கும் இன்னல்கள் குறித்து கேட்டறிந்தார்.
அப்போது பேசிய அவர், மத்திய அரசின் இந்த நடவடிக்கை, கறுப்பு பணத்தை பதுக்கி வைத்துள்ள பெரு முதலாளிகளுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்த வில்லை என்று குறிப்பிட்டார். எனினும், அப்பாவி பொது மக்களே வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ராகுல் தெரிவித்தார்.
English Summary:

Sarojini Nagar market in Delhi, Congress leader Rahul Gandhi's sudden visit last night.