சென்னை: கரும்பு விவசாயிகளை இனியும் வஞ்சிக்காமல் உடனடியாக கரும்பு நிலுவை தொகையை தமிழக அரசு வழங்க வேண்டும் என எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். தனியார் சர்க்கரை ஆலைகளில் ரூ.1,650 கோடியும், கூட்டுறவு சர்க்கரை ஆலைகளில் ரூ.200 கோடியும் விவசாயிகளுக்கு நிலுவை வைக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டி அவர் அறிக்கை வெளியிட்டுள்ளார். நிலுவை தெகையை பெற்றுத்தர 3-ம் தேதி பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று அதிமுக அரசு, கரும்பு விவசாயிகளுக்கு உத்தரவாதம் அளித்ததாக ஸ்டாலின் கூறியுள்ளார்.
நல்ல முடிவு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புக்கு மாறாக பேச்சுவார்த்தை திடீரென தள்ளி வைக்கப்பட்டுள்ளதை அவர் சுட்டிக் காட்டியுள்ளார். மேலும் பேச்சுவார்த்தை எப்போது நடக்கும் என அறிவிக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தனியார் சர்க்கரை ஆலைகளிடம் நிலுவைத் தொகையை பெற்றுத்தருவதுடன் கூட்டுறவு சர்க்கரை ஆலைகளில் உள்ள பாக்கித் தொகை வழங்க வேண்டிய பொறுப்பும் தமிழக அரசுக்கு உள்ளதாக ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். எனவே உடனடியாக பேச்சுவார்த்தையை நடத்தி நிலுவைத் தொகையை பெற்றுத்தர அவசர நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
Friday 4 November 2016
Home »
» கரும்பு விவசாயிகளை தமிழக அரசு இனியும் வஞ்சிக்க வேண்டாம் : மு.க.ஸ்டாலின்