லக்னோ : அதிக மதிப்பிலான ரூபாய் நோட்டுகளை மத்திய அரசு வாபஸ் பெற்றதால், ஒரு பேரிடர் சூழலை விவசாயிகள் எதிர்கொண்டு வருவதாக உ.பி., முதல்வர் அகிலேஷ் யாதவ் தெரிவித்தார்.
பணக்காரர்களுக்கு பாதிப்பில்லை:
உ.பி., மாநில அமைச்சரவைக் கூட்டம் நேற்று(நவ.,19) நடைபெற்றது. கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களை சந்தித்த அகிலேஷ் கூறியதாவது: அதிக மதிப்பிலான ரூபாய் நோட்டுகளை மத்திய அரசு வாபஸ் பெற்றது, எந்தவித முன்னேற்பாடும் இல்லாமல் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை. இதனால் பணக்காரர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை.
விவசாயிகள் பாவம்:
ரூபாய் நோட்டு விவகாரத்தால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது விவசாயிகளே. இந்த ஆண்டு, இயற்கை அன்னையின் கருணையால் நல்ல விளைச்சல் கிடைத்தும், அதன் பலனை அனுபவிக்க முடியாமல் விவசாயிகள் தவிக்கின்றனர். விவசாயிகள் பாதிக்கப்பட்டால், நாட்டின் ஒட்டு மொத்த பொருளாதாரமும் பாதிக்கும் என்பதை மத்திய அரசு உணரவில்லை.
அனுமதி வேண்டும்:
விவசாயிகளைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்கு உள்ளது. எனவே, பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகளை பணப் பரிவர்த்தனைகளுக்குப் பயன்படுத்த விவசாயிகளுக்கு மட்டுமாவது மத்திய அரசு அனுமதியளிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
English Summary:
f the federal government withdrew the banknotes expensive, farmers are facing a disaster for the environment, UP Chief Minister Akhilesh Yadav said.