மத்திய அரசால் தடை செய்யப்பட்ட, மத போதகர் ஜாகீர் நாயக்கிற்குச் சொந்தமான இஸ்லாமிய ஆராய்ச்சி அறக்கட்டளையின் 12 அலுவலகங்களில் தேசியப் புலனாய்வு அமைப்பினர் (என்ஐஏ) அதிரடிச் சோதனை நடத்தினர். அப்போது, அங்கிருந்த ஆவணங்கள், கோப்புகள், ரூ.12 லட்சம் ரொக்கம், ஹார்டு டிஸ்க் ஆகியவற்றை அதிகாரிகள் கைப்பற்றினர்.
கைப்பற்றப்பட்ட சில ஆவணங்களில் அந்த அறக்கட்டளை மேற்கொண்ட நிதி பரிவர்த்தனைகள் தொடர்பான தகவல்களும், ஜாகீர் நாயக்கின் சொத்து விவரங்களும் அடங்கியுள்ளன.
வங்கதேசத் தலைநகர் டாக்காவில் உள்ள ஒரு ஹோட்டலுக்குள் கடந்த ஜூலை மாதம் நுழைந்த பயங்கரவாதிகள் அங்கிருந்தோரை சரமாரியாக துப்பாக்கியால் சுட்டதில் 29 பேர் உயிரிழந்தனர். அந்தத் தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட பயங்கரவாதிகளுள் ஒருவர், தான் ஜாகீர் நாயக்கின் போதனைகளால் கவரப்பட்டதாக சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தார்.
இதைத் தொடர்ந்து, மும்பையில் உள்ள ஜாகீர் நாயக்கால் நிறுவப்பட்ட இஸ்லாமிய ஆராய்ச்சி அறக்கட்டளையின் அலுவலகங்கள் பல்வேறு பாதுகாப்பு அமைப்புகளின் கண்காணிப்பு வளையத்தில் கொண்டு வரப்பட்டன. போலீஸாரின் கைது நடவடிக்கையை தவிர்ப்பதற்காக நாயக் வெளிநாட்டுக்குச் சென்றுவிட்டார். எனினும் அவரது போதனைகளை ஒளிபரப்ப பிரிட்டன் மற்றும் கனடா ஆகிய நாடுகளில் அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.
இதனிடையே, கடந்த சில நாள்களுக்கு முன்பு இஸ்லாமிய ஆராய்ச்சி அறக்கட்டளையைத் தடை செய்யப்பட்ட அமைப்பாக மத்திய அமைச்சரவை அறிவித்தது. நிகழாண்டு தொடக்கத்தில் மும்பையில் புறநகர்ப் பகுதிகளில் உள்ள சில இளைஞர்கள், தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பில் இணைந்தனர். மற்ற மதத்தினருக்கு ஆத்திரமூட்டும் வகையில் பேசுவதாகவும், இளைஞர்களுக்கு மூளைச்சலவை செய்து பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுத்துவதாகவும் ஜாகீர் நாயக் மீது மகாராஷ்டிர போலீஸார் குற்றவியல் வழக்குகளை வெள்ளிக்கிழமை இரவு பதிவு செய்தனர்.
இந்நிலையில் ஜாகீருக்குச் சொந்தமான இஸ்லாமிய ஆராய்ச்சி அறக்கட்டளையின் 12 அலுவலகங்களில் சனிக்கிழமை காலை அதிரடிச் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
English Summary: Banned by the federal government, the Research Foundation of the Islamic preacher Zakir nayakkirkuc 12 offices belonging to the National Intelligence Association (enaie) raided. Then, the documents, files, Rs 12 lakh cash, hard disk Authorities seized.