உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த அமைச்சர் இக்பால் மெஹ்மூத், இரவு நேரத்தில் வங்கிக்கு சென்று பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை மாற்றியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை வங்கியில் கொடுத்து மாற்றுவதற்காக பொது மக்கள், வங்கிகள் மற்றும் அஞ்சலகங்களில் மணிக்கணக்கில் வெயிலையும் பொருட்படுத்தாமல் காத்திருக்கின்றனர்.
இந்நிலையில், உத்தரப்பிரதேசத்தின் சம்பால் பகுதியில் உள்ள தனியார் வங்கிக்கு இரவு நேரத்தில் பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்காக அம்மாநில அமைச்சர் இக்பால் மெஹ்மூத் சென்றார். அந்த நேரத்தில் வங்கி செயல்படாத போதிலும், அமைச்சரின் வருகையை முன்னிட்டு, வங்கி மீண்டும் திறக்கப்பட்டது.
அமைச்சரும், அவரது மகனும் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். வங்கியின் மேலாளர் அறைக்கு சென்ற அமைச்சருக்கு, தேநீர் கொடுத்து வங்கி மேலாளர் உபசரித்தார். பின்னர் சில நிமிடங்களில் பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொண்டு, அமைச்சர் மெஹ்மூத் வங்கியில் இருந்து வெளியே சென்றார்.
English Summary:
At night, go to the bank and changed the old banknotes of 500 and 1000 caused controversy.