திருவனந்தபுரம்:கேரள மாநிலத்தில், புதிய அமைச்சராக, தொழிற்சங்க தலைவர் எம்.எம்.மாணி அறிவிக்கப்பட்டு உள்ளார். கேரளாவில், மார்க்.கம்யூ., கட்சியைச் சேர்ந்த, முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான, இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. இங்கு, விளையாட்டுத் துறை அமைச்சராக இருந்த, இ.பி.ஜெயராஜன், தன் உறவினர்களை, அரசு பதவிகளில் நியமித்த புகாரில், பதவியை இழந்தார். இந்நிலையில், தன் அமைச்சரவையில், பினராயி விஜயன், அதிரடியாக சில மாற்றங்களை செய்துள்ளார்.
புதிய அமைச்சராக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், தொழிற் சங்கவாதியுமான எம்.எம்.மாணி நேற்று அறிவிக்கப்பட்டார். வேறு சில அமைச்சர்களின் துறைகள் மாற்றப்பட்டுள்ளன. கடகம்பள்ளி சுரேந்திரனுக்கு கூட்டுறவுத் துறையும், மொய்தீனுக்கு தொழில் துறையும் ஒதுக்கப்பட்டு உள்ளது.
English Summary:
In Kerala, the new minister, the trade union leader has declared m.m.mani. In Kerala, markkamyu., Party, led by Chief Minister Pinarayi Vijayan, the Left Democratic Front's rule.