புதுடில்லி: டில்லியில் இன்று நடந்த காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில், தலைவர் பதவியை ஏற்க ராகுலை மூத்த தலைவர்கள் வலியுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
ராகுல் தலைமை:
குளிர்கால பார்லிமென்ட் கூட்டத்தொடர், சட்டசபை தேர்தல் குறித்து விவாதிக்க காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் நடந்தது. உடல் நலக்குறைவு காரணமாக இந்த கூட்டத்தில், சோனியா கலந்து கொள்ளவில்லை. ராகுல் தலைமையில் இந்த கூட்டம் நடந்தது. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் மத்திய அமைச்சர் அந்தோணி உள்ளிட்ட தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர்.
விருப்பம்:
இந்த கூட்டத்தில், காங்கிரஸ் தலைவர் பதவியை ஏற்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் அந்தோணி வலியுறுத்தினார். இதனையே, மன்மோகன் சிங்கும் வலியுறுத்தினார். கூட்டத்தில் கலந்து கொண்ட உறுப்பினர்களும் இதனை வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. மேலும் செயற்குழு உறுப்பினர்கள், ராகுலை காங்., தலைவராக நியமிக்க வேண்டும் என சோனியாவிடம் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. இருப்பினும், ராகுல் செயல் தலைவராக நியமிக்கப்படுவாரா அல்லது தலைவராக நியமிக்கப்படுவாரா என்பது இன்னும் தெளிவாக தெரியவில்லை.
இதன் பின்னர் பத்திரிகையாளர்களிடம் பேசிய அந்தோணி, காங்கிரஸ் தலைவராக ராகுல் பதவியேற்க வேண்டும் என செயற்குழு விரும்புகிறது. சர்வாதிகார மோடி ஆட்சிக்கு எதிராக அனைவரும் ஒன்று சேர வேண்டிய நேரமிது. ராகுல் பதவியேற்பது குறித்த இறுதி முடிவை, சோனியா தான் எடுப்பார் என்றார்.
கூட்டம் குறித்து, பேசிய காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளர் சுர்ஜிவாலா கூறுகையில், எந்த பதவியையும் ஏற்க ராகுல் தயாராக உள்ளார். இந்தியாவுக்காக போராட வேண்டும் என ராகுல் வலியுறுத்தினார். கட்சி தொண்டர்கள் என்ன விரும்புகிறாரோ அதனை செய்ய ராகுல் தயாராக உள்ளார். காங்கிரஸ் கொண்டு வந்த ஒன் ரேங்க் ஒன் பென்சன் திட்டத்தை மாற்றி ஒன் ரேங்க் பல பென்சன் என மாற்ற மோடி நினைக்கிறார்.