ஜப்பான் தலைநகர் டோக்கியோ அருகே திடீரென நேற்று காலை ஏற்பட்ட பிரம்மாண்ட புதைகுழி காரணமாக போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவுக்கு அருகே உள்ள ஃபுகுவோட்டா நகரில் உள்ள நெடுஞ்சாலை ஒன்றில் இன்று காலை திடீரென பள்ளம் ஏற்பட்டது. இந்த பள்ளம் சுமார் 30 மீட்டர் நீளமும், 27 மீட்டர் அகலமும், 15 மீட்டர் ஆழமும் கொண்டிருந்தது.
நெடுஞ்சாலையின் மையப்பகுதியில் திடீரென ஏற்பட்ட இந்த பள்ளம், அந்த வழியாக வாகனங்களை ஓட்டிவந்தவர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. நான்கு வழிச்சாலையின் குறுக்கே ஏற்பட்ட இந்த பள்ளத்தில் அதிர்ஷ்டவசமாக எந்த வாகனமும் சிக்கவில்லை.
இதையடுத்து உடனடியாக அப்பகுதிக்கு வந்த அதிகாரிகள் பள்ளத்தைச் சரிப்படுத்தி போக்குவரத்துக்கு வழி ஏற்படுத்திக்கொடுக்க முயன்றனர். பள்ளம் ஏற்பட்டதால் கியாஸ் குழாய்கள் உடைந்தன என்றும், இதனால் அப்பகுதியில் தீ பற்ற வைக்க சிறிது நேரம் தடைவிதிக்கப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.