லண்டன் : உலக ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் ஜோகோவிச் அரை இறுதிக்கு முன்னேறியுள்ளார்.
உலக ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி லண்டனில் நடந்து வருகிறது. டாப்-8 வீரர்கள் மட்டுமே பங்கேற்றுள்ள இந்த போட்டியில் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு மோதுகிறார்கள். ரவுண்ட் ராபின் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் வீரர்கள் அரைஇறுதிக்கு தகுதி பெறுவார்கள்.
இதில் ‘இவான்லென்டில்’ பிரிவில் செவ்வாய்கிழமை இரவு நடந்த ஒரு ஆட்டத்தில் 2-ம் நிலை வீரரும், 5 முறை சாம்பியனுமான நோவக் ஜோகோவிச் (செர்பியா), மிலோஸ் ராவ்னிக்கை (கனடா) எதிர்கொண்டார். திரிலிங்கான இந்த மோதலில் ஜோகோவிச் 7-6 (8-6), 7-6 (7-5) என்ற செட் கணக்கில் ராவ்னிக்கை வீழ்த்தி 2-வது வெற்றியுடன் முதல் வீரராக அரை இறுதிக்குள் நுழைந்தார்.
இந்த பட்டத்தை மட்டும் ஜோகோவிச் வென்றால் தரவரிசையில் மீண்டும் முதலிடத்தை பிடித்து விடுவார் என்பது குறிப்பிடத்தக்கது. மிலோஸ் ராவ்னிக் கடைசி லீக்கில் டொமினிக் திம்முடன் (ஆஸ்திரியா) மோதுகிறார். இதில் வெற்றி பெறுபவர் இந்த பிரிவில் இருந்து 2-வது வீரராக அரைஇறுதியை எட்டுவார். 2 தோல்விகளை சந்தித்த கேல் மான்பில்ஸ் (பிரான்ஸ்) வாய்ப்பை இழந்து வெளியேறி விட்டார்.
Summary: Men's Tennis World Championship is taking place in London. Top -8 players of the participants in this competition were divided into two factions collides. The first two places in each class at the end of Round Robin likes players are eligible to semi-final.