புதுடில்லி : ரூபாய் நோட்டு வாபஸ் பெற்ற விவகாரம் குறித்து ராஜ்யசபாவில் இன்று ( நவம்பர் 24) பிரதமர் மோடி உரையாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
எதிர்க்கட்சிகள் அமளி :
ரூ.500, 1000 நோட்டுக்களை வாபஸ் பெறுவதாக நவம்பர் 8 ம் தேதி பிரதமர் மோடி அறிவித்தார். இதற்கு பல்வேறு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தன. இந்த பரபரப்பான சூழ்நிலையில் நவம்பர் 16ம் தேதி பார்லி., குளிர்கால கூட்டத் தொடர் துவங்கியது. கூட்டத் தொடர் துவங்கிய நாள் முதல், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ரூபாய் நோட்டு விவகாரத்தை கையில் எடுத்து, அமளியில் ஈடுபட்டு வருகின்றன. ரூபாய் நோட்டுக்கள் வாபஸ் உத்தரவை திரும்பப் பெற வேண்டும் எனவும், பிரதமர் பார்லி.,யில் இது பற்றி பதிலளிக்க வேண்டும் எனவும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. எதிர்க்கட்சிகளில் தொடர் கூச்சல் குழப்பத்தால் பார்லி.,யின் இருஅவைகளும் அடுத்தடுத்து ஒத்திவைக்கப்பட்டு வருகின்றன.
இது ஒருபுறம் இருக்க, பார்லி., வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன் நேற்று (நவம்பர் 23) 12 எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 200 எம்.பி.,க்கள் தர்ணா போராட்டம் நடத்தினர். பின்னர் நவம்பர் 28 ம் தேதி நாடு முழுவதும் போராட்டம் நடத்தப்படும் எனவும் அறிவித்தனர். தொடர்ந்து அவைக்கு வந்த அவர்கள், மீண்டும் அமளியில் ஈடுபட்டனர். அரசு தரப்பில் இருந்து பலமுறை விளக்கம் அளிக்கப்பட்டும் எதிர்க்கட்சிகள் ஏற்க மறுத்து வருகின்றன. இதனால் 7 வது நாளாக இன்றும் பார்லி., செயல்பாடுகள் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
மோடி உரை :
எதிர்க்கட்சிகளில் அமளியை சமாளித்து, கூட்டத் தொடரை சுமூகமாகவும், ஆக்கப்பூர்வமாகவும் நடத்துவது குறித்து முக்கிய அமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு, எதிர்க்கட்சிகளின் அமளியை தடுப்பதற்காக இன்று ராஜ்யசபாவில், ரூபாய் நோட்டு வாபஸ் விவகாரம் குறித்து உரையாற்ற பிரதமர் மோடி முடிவு செய்திருப்பதாக தெரிவிக்கிறது.
English Summary:
Regarding the issue of the withdrawal of bill in the Rajya Sabha today (November 24) The Prime Minister is expected to speak.