மதுரை: ஓட்டுப்போடாத வாக்காளர்களிடம் இருந்து பணத்தை திரும்பு வசூல் செய்திருக்கிறார்களாம் அரசியல் கட்சியினர்.
தமிழகத்தில் இடைத்தேர்தல் நடந்த 3 தொகுதிகளிலும் அதிமுக வெற்றிப்பெற்றது. தேர்தல் முடிவுகள் சாதகமாக வந்த பிறகு நிம்மதியடைவார்கள்
அதன் பிறகு தேர்தல் தொடர்பான எந்த நடவடிக்கையும் எடுக்கமாட்டார்கள். ஆனால், இந்த முறை புதிய யுக்திகளை செயல்படுத்தி வருகிறார்கள் அதிமுக நிர்வாகிகள்.
அதிமுக தலைமைக்கழக நிர்வாகிகளிடம் பேசியபோது, ஒவ்வொரு தொகுதியிலும் 5 அமைச்சர்கள் உட்பட அதிக எண்ணிக்கையில் பொறுப்பாளர்கள் பட்டியல் அமைக்கப்பட்டது. ஒவ்வொரு அமைச்சருக்கும் வார்டுகள் பிரித்து தரப்பட்டன. அதிலுள்ள வாக்காளர்களை பர்ச்சேஸ் பன்ற வேலைதான் முக்கியமானது. அதன் படி ஒரு வோட்டுக்கு 2000 தந்தனர்.
தேர்தல் முடிவுக்குப்பிறகு, பணம் வாங்கிய பலர் ஓட்டு போட பூத்துக்குப் போகவில்லை என்பதை கண்டறிந்துள்ளனர். எந்த தொகுதியில் எந்த வார்டில் வாக்குப்பதிவு குறைவாக உள்ளது என்பதை லிஸ்ட் எடுத்தனர்.
உடனே, தங்கள் வாக்கை பதிவு செய்யாத வாக்களார்களின் பட்டியலை எடுத்துள்ளனர் அமைச்சர்கள். அவர்களில் யார், யாருக்கெல்லாம் பணம் கொடுக்கப்பட்டதோ அவர்களிடமிருந்து திரும்ப பணத்தை வசூலிக்க தங்களது ஆட்களுக்கு உத்தரவிட்டனர் அமைச்சர்கள்.
தேர்தல் முடிவு வெளியான பின்னர் இந்த பணியில் ஈடுபட்டவர்கள், இருநாட்களுக்கு முன்புதான் அந்த பணியை நிறைவு செய்துள்ளனர். இனிமேல், பணம் வாங்கிக்கொண்டும் ஓட்டுச்சாவடி பக்கமே வராதவர்களிடமிருந்து பணத்தை திரும்ப வாங்கிவிடுவதுதான் புதிய யுக்தி. அதனை இடைத்தேர்தலிலிருந்து அமல் படுத்தியிருக்கிறோம் என்று விவரிக்கிறார்கள். நல்ல யுக்திதான். அப்போ பணம் வாங்கினால் கண்டிப்பாக ஓட்டு போட்டே ஆகவேண்டும் என்பதுதான் அரசியல் கட்சியினர் கட்டளையாக உள்ளது.
English summary:
Political parties purchase vote in the 3 constituencies by election. Voters did not go to polling booth, ADMK workers collected money from the voters.