வாஷிங்டன்: இமெயில் விவகாரத்தில் ஹிலாரிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க ஆதாரமில்லை என எப்.பி.ஐ., அறிவித்துள்ளது.
குற்றச்சாட்டு:
அமெரிக்க அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல், வரும், 8ல், நடக்க உள்ள நிலையில், ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடும் முன்னாள் வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளின்டனுக்கு எதிரான, இ - மெயில் விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. தன் தனிப்பட்ட, இ - மெயில் முகவரியை, அரசு பணிக்காக பயன்படுத்தியதாக ஹிலாரி மீது குற்றம் சாட்டப்பட்டது. மேலும் தனியார், 'சர்வரில்' இருந்து தகவல்களை அழித்ததாகவும் கூறப்பட்டது. இந்த வழக்கை கடந்த ஜூலை மாதம் எப்.பி.ஐ., எனப்படும் அமெரிக்க புலனாய்வு அமைப்பு முடித்து வைத்தது. இது தொடர்பாக குடியரசு கட்சி தலைவர் டொனால்டு டிரம்ப், தனது பிரசாரத்தில் தொடர்ந்து எழுப்பி வந்தார்.
சிக்கல்:
இந்நிலையில், இந்த வழக்கில் புதிய தகவல்கள் கிடைத்துள்ளதாகவும், விசாரணையை மீண்டும் துவக்க உள்ளதாகவும், எப்.பி.ஐ., அறிவித்திருந்தது. தொடர்ந்து, ஹிலாரியின் உதவியாளராக பணியாற்றியவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட, 'லேப்டாப்'பில், 6.5 லட்சம் தகவல்கள் உள்ளதாகவும், அது குறித்து விசாரணை துவங்கியுள்ளதாகவும் எப்.பி.ஐ., கூறியுள்ளது. இது, ஹிலாரி தரப்புக்கு மிகப்பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியது. இதனால் ஹிலாரி செல்வாக்கு குறைந்ததாக தகவல் வெளியானது
சாதகம்!
இந்நிலையில், இந்த விவகாரத்தில் ஹிலாரி மீது புதிதாக வழக்குப்பதிவு செய்யப்போவதில்லை என எப்.பி.ஐ., கூறியுள்ளது. இது தொடர்பாக எப்.பி.ஐ., தலைவர் கூறுகையில், கடந்த சில நாட்களாக அதிகாரிகள் புதிய இமெயில்களை ஆய்வு செய்தனர். இதில் ஹிலாரிக்கு எதிராக புதிய ஆதாரம் கிடைக்கவில்லை. இதனால் அவர் மீது நடவடிக்கை எடுப்பதற்கான முகாந்திரம் இல்லை எனக்கூறியுள்ளார். அதிபர் தேர்தல் நடக்க இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில், ஹிலாரிக்கு நிம்மதி ஏற்பட்டுள்ளது. இது அவருக்கு சாதகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எப்.பி.ஐ.,யின் இந்த முடிவுக்கு ஜனநாயக கட்சியினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.