500 ரூபாய் 1000 ரூபாய் நோட்டுக்கள் இனி செல்லாது என்ற பிரதமர் மோடியின் அறிவிப்பினால் பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் முதல் விசாயிகள் வரை அனைத்து மட்டங்களிலும் மிகப்பெரிய அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய நிதியமைச்சகம் மற்றும் வருமான வரித்துறை இணைந்து அறிவித்த IDS திட்டம் கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி முடிந்த நிலையில். இத்திட்டத்தின் மூலம் போதிய அளவிலான பலனை அனுபவிக்க முடியாத காரணத்தினாலேயே மோடி 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளைச் செல்லத்தகாத ஒரு வெத்துக் காகிதம் என்ற நிலைக்குக் கொண்டு வந்துள்ளார். இதுவரை மக்கள் மறைத்து வைத்திருந்த கருப்புப் பணம் மற்றும் மறைக்கப்பட்ட வருமானத்தை அரசுக்குத் தெரிவிக்கும் திட்டம் தான் இது.
இந்தியாவில் கடந்த சில வருடங்களாகப் பணத்திற்காக ஒட்டு போடும் மனநிலை அதிகளவில் உருவாகியுள்ளது. இதனைத் தடுக்கும் விதமாக மத்திய அரசு இப்புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தேர்தல் காலங்களில் 1000 ரூபாய் நோட்டுகளின் புழக்கம் அதிகளவில் இருப்பதாக மத்திய அரசு கண்டுபிடித்துள்ளது. இதன் வாயிலாகவே இந்த அறிவிப்பை மோடி அறிவித்துள்ளார்.