வங்கி சேமிப்புக் கணக்கு உள்பட எந்த வகையான கணக்கு வைத்திருந்தாலும் காசோலை உள்ள நிலையில் பணம் எடுப்பதற்கு வாடிக்கையாளர்கள் அதைப் பயன்படுத்துவது அவசியம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.இதுதொடர்பாக வங்கி அதிகாரிகள் அளித்த விளக்கம்: பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை மாற்றிக் கொள்ளவும் புதிய கட்டுப்பாடுகளை மத்திய அரசு விதித்துள்ளது. அதாவது, பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகளுக்கு ரூ.2,000 மட்டுமே ஒரே ஒரு முறை மாற்றிக் கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது; எனினும் பழைய நோட்டுகளை சேமிப்புக் கணக்கில் டெபாசிட் செய்வதற்கு தடை ஏதும் இல்லை. இதனால் தங்களது தேவைக்கு வங்கிக்குச் சென்று பணம் எடுக்கும் நிலைக்கு வாடிக்கையாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
வரம்பு காரணமாக...: வாடிக்கையாளர்கள் தங்களது சேமிப்புக் கணக்கிலிருந்து நாள் ஒன்றுக்கு அதிகபட்சம் ரூ.24,000 வரை எடுக்கலாம்; எனினும் முதல் தடவையிலேயே அதிகபட்ச தொகை ரூ.24,000-த்தை வங்கிக் கணக்கிலிருந்து எடுத்து விட்டால், மீண்டும் கணக்கிலிருந்து தொகை எடுக்க ஒரு வாரம் காத்திருக்க வேண்டும்.
காசோலை புத்தகம் பெற்றிருந்தால்...: இந்த நிலையில் வங்கிக் கணக்கு தொடங்கியதிலிருந்து காசோலை இல்லாமல் வங்கிப் படிவம் மூலம் பணம் எடுப்பவராக இருந்தால் பிரச்னை ஏதும் இன்றி அதிகபட்ச தொகை ரூ.24,000 அளிக்கப்படும். மாறாக, வங்கிக் கணக்கை தொடங்கிய பிறகு காசோலை புத்தகம் பெற்று விட்டு, அதைத் தொடர்ந்து, பயன்படுத்தாமல் இருப்போருக்கு பணம் அளிக்கப்பட மாட்டாது. ஏனெனில் வாடிக்கையாளரின் வங்கிக் கணக்குப் பதிவில் காசோலை வழங்கப்பட்டிருப்பது ஏற்கெனவே பதிவாகியிருக்கும் என்பதால், பணம் அளிப்பதை வங்கியின் கம்ப்யூட்டர் அனுமதிக்காது.
இத்தகைய தருணத்தில் வங்கி மேலாளரை அணுகி கடிதம் கொடுத்தால், காசோலை அற்ற கணக்காக வாடிக்கையாளரின் கணக்கை மாற்றி விட்டு, படிவத்துக்குப் பணம் அளிக்க முடியும். எனவே தங்களது சேமிப்புக் கணக்கு உள்பட அனைத்து வகையான கணக்கு வைத்துள்ளோரும் காசோலை புத்தகத்தைப் பெற்று பண பரிவர்த்தனை செய்வதே சிறந்தது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
Summary:Bank officials explained that in this regard: the old Rs 500 and Rs 1,000 notes to change the new regulations imposed by the Central Government. I mean, the old Rs 500, Rs 1,000 and Rs 2,000 notes were to switch only one time; However, the old banknotes to be deposited in a savings account is not prohibited. If you go to the bank to demand the money their customers have been forced to take the position.