புதுடில்லி : அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள டொனால்டு டிரம்பை பாராட்டி, இந்திய தொழிலக கூட்டமைப்பான, சி.ஐ.ஐ., அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதன் விபரம்: இந்திய மருந்து பொருட்கள் துறை, நிதிச் சேவைகள் நிறுவனங்கள் மற்றும் சிறிய, நடுத்தர நிறுவனங்கள், அமெரிக்க சந்தையில் எதிர்கொள்ளும் சவால்களுக்கு, டிரம்ப் தீர்வு காண்பார் என, எதிர்பார்க்கப்படுகிறது.
பொருட்களின் தரம், தயாரிப்பில் போட்டித்திறன், பாதுகாப்பு துறையில் கூட்டு மற்றும் தொழில்நுட்ப வல்லுனர்களுக்கு பணி வாய்ப்பு ஆகிய அடிப்படை அம்சங்களில், அமெரிக்காவுடன், இந்தியா இணைந்து செயலாற்றி வருகிறது. இந்த கூட்டுறவை, டிரம்ப் நிர்வாகத்துடன் இணைந்து மேலும் வலுப்படுத்த, இந்தியா ஆர்வமாக உள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாஸ்காம் அமைப்பு, 'அமெரிக்காவில், தகவல் தொழில்நுட்ப பணியாளர்களுக்கான தேவை அதிகம் உள்ளதால், இந்திய தொழில்நுட்ப துறையுடன் டிரம்ப் அரசு இணைந்து செயல்படும்' என, எதிர்பார்ப்பதாக கூறியுள்ளது.