தென்கொரிய அதிபர் மீதான ஊழல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக சாம்சங் நிறுவனத்தில் ஊழல் தடுப்பு அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
தென்கொரிய அதிபர் பார்க் க்யூன்-ஹையின் நெருங்கிய தோழியான Choi Soon-sil அரசு அதிகாரத்தில் தலையிட்டு பல்வேறு ஊழல் குற்றங்கள் புரிந்ததாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.
இது தொடர்பாக Choi Soon-sil ஏற்கனவே கைது செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இதனால் அதிபர் பார்க் க்யூன்-ஹை பதவி விலக கோரி பல நாட்களாகப் போராட்டம் நடந்து வருகிறது.
இந்நிலையில், சாம்சங் நிறுவனத்திடம் Choi Soon-sil லஞ்சம் பெற்றதாக எழுந்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக ஊழல் தடுப்பு அதிகாரிகள் இன்று அந்நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் அதிரடி சோதனை நடத்தினர்.
ஆனால், சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மற்றும் தகவல்கள் தொடர்பான விவரங்களை வெளியிட அதிகாரிகள் மறுத்துவிட்டனர்.