புதுடில்லி: உத்தர பிரதேச மாநிலம், கான்பூர் அருகே இந்தூர் - பாட்னா விரைவு ரயில் தடம்புரண்டு விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் 100 பேர் பலியாகியுள்ளனர்; பலர் காயமடைந்துள்ளனர். இந்த ரயில் பெரிய அதிர்வுடன் தடம்புரண்டு விபத்திற்குள்ளானதாக சம்பவத்தை பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்தில் தேசிய பேரிடர் மீட்பு படையினர், உ.பி., மாநில போலீசார் தீவிர மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சம்பவ இடத்திற்கு வந்த ஏராளமான ஆம்புலன்ஸ்கள் காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு அழைத்து சென்றன.
இது தொடர்பாக உயிர் தப்பிய உ.பி., மாநிலம், பஹ்ராய்ச் பகுதியை சேர்ந்த ரயில் பயணி ஒருவர் கூறுகையில், ‛அதிகாலை, 3:00 மணியளவில் ரயில் தடம்புரண்டது. நான் 5வது பெட்டியில் இருந்தேன். திடீரென ரயில் அதிகளவில் குலுங்கியது. மக்கள் அங்கும் இங்கும் சிதறி விழுந்தனர். நாங்கள் அனைவரும் கதறினோம். என்னுடன் வந்த 5 பேரை காணவில்லை. அங்கு சென்று பார்ப்பதற்கு என் உடலில் தெம்பு இல்லை' என்றார்.
மற்றொரு இளம் பெண் ஒருவர் கூறுகையில், ‛லக்னோ ரயில் நிலையத்தில் நாங்கள் இறங்க இருந்தோம். நாங்கள் பயணித்து கொண்டிருந்த போது, ரயிலில் திடீரென அதிர்வு ஏற்பட்டது. தொடர்ந்து பெட்டிகள் தடம்புரண்டு விழுந்தன. ஏராளமான மக்களை காணவில்லை. எங்களுடன் வந்த 5 பேரை காணவில்லை. அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை' என்றார்.
மேலும் சிலர், ரயில் பெட்டிகள் வானில் பறந்தது போலவும், பெரிய அதிர்வுகளுடன் விபத்திற்குள்ளானதாக தெரிவித்தனர். ரயில் விபத்து குறித்து தகவல் தெரிந்த பொது மக்கள் ஏராளமானோர், கான்பூர் ரயி்ல நிலையத்தில் குவிந்தனர். அவர்களுக்கு தேவையான தகவல்கள் தரப்படவில்லை என புகார் கூறப்பட்டுள்ளது.
உ.பி., மாநில போலீஸ் டி.ஜி.பி., ஜாவேத் அகமது கூறுகையில், ‛‛ ஒரு ராணுவ குழு, சிறப்பு மருத்துவர்கள் குழு, துணை ராணுவப்படையினர் மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இறந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. மாநிலத்தில் வேறு பகுதிக்கு செல்ல வேண்டியவர்கள் பஸ்கள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர், '' என்றார்.
English Summary:
Uttar Pradesh, Kanpur, Indore, near - Patna Express aberrations occurred. 100 people were killed in this incident; Many people have been injured. The train crashed aberrations with big quake saw the incident said. National Disaster Force on the scene, UP, the state police have been active in the recovery process