லண்டன் : இங்கிலாந்தின் மிக நெருங்கிய நட்பு நாடாக இந்தியா விளங்குவதாக அந்நாட்டுப் பிரதமர் தெரசா மே தெரிவித்துள்ளார்.
நெருங்கிய நட்பு நாடு :
இங்கிலாந்து பிரதமர் தெரசா மே இந்தியாவில் 3 நாள் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார். இந்தியா புறப்படுவதற்கு முன்னர் தனது இந்திய பயணம் குறித்து, ‛சண்டே டெலிகிராப்' நாளிதழுக்கு எழுதிய கட்டுரையில் தெரசா மே கூறியிருப்பதாவது:
இந்தியா, நமது முக்கியமான, நட்பு நாடுகளில் ஒன்று. இந்தியாவுடன் நாம் கலாச்சார உறவுகளை பகிர்ந்து கொண்டுள்ளோம். நீண்ட கால பலன் அளிக்கக்கூடிய சீர்திருத்தங்களை பிரதமர் மோடி தலைமையில் இந்தியா செய்து வருகிறது. அந்நாட்டுடன் நமது நட்புறவை மேலும் பலப்படுத்துவதற்கு இது சரியான தருணம்.
தடையற்ற வர்த்தகம் :
இங்கிலாந்தின் நலனுக்கான சில காரியங்களை செய்ய வேண்டியுள்ளது. வர்த்தகம், முதலீடு, பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை மேலும் அதிகரிக்க இந்தியாவிடம் வலியுறுத்தப்படும். இந்தியாவில் 'ஸ்மார்ட் சிட்டி', 'மேக் இன் இந்தியா' உள்ளிட்ட திட்டங்கள் அமல்படுத்தப்படுவதால், அதன் இலக்கை எட்ட இங்கிலாந்து உதவும். ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து விலகும் பணி முடிந்த பிறகு, தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் செய்து கொள்ளப்படும். இவ்வாறு அவர் எழுதியுள்ளார்.