வாஷிங்டன்: உலகமே மிகவும் எதிர்பார்த்து கொண்டிருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் நாளை நடைபெறுகிறது. அமெரிக்க அதிபர் தேர்தலில் 14 கோடியே 63 லட்சத்து 11 ஆயிரம் வாக்களிக்க பதிவு செய்துள்ளனர். இவர்களில் 69 சதவீதம் பேர் அதிபர் தேர்தலில் நிச்சையமாக வாக்களிக்க போவதாக தெரிவித்துள்ளனர். ஏற்கனவே சுமார் 4 கோடி பேர் முன்கூட்டியே வாக்களிக்கும் வசதியை பயன்படுத்தி ஓட்டுப்போட்டுவிட்டனர். வழக்கமான தேர்தலைவிட இந்த தேர்தலில் குடியசு கட்சி வேட்பாளர் டொனால் டிரம்புக்கும் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டனுக்கும் கடுமையான போட்டி நிலவுகிறது. வழக்கமான தேர்தலைவிட அடுத்த அமெரிக்க அதிபர் என்பதை யுகிக்க முடியாத அளவு கடும் போட்டி நிலவுவதால் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. வாக்காளர்களை கவர ஹிலாரியும், டிரம்பும் கடைசிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.
நவட நகரில் டிரம்ப் பிரச்சாரத்தில் ஈடுப்பட்டிருந்த போது மர்ம நபர் ஒருவர் அவர் மீது தாக்குதல் நடத்த பாய்ந்தார். ஆனால் டிரம்பின் பாதுகாவலர்கள் அவரை தடுத்து நிறுத்தினர். பின்னர் டிரம்ப் பத்திரமாக அழைத்து செல்லப்பட்டார். இதனால் அங்கு சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது. ஹிலாரி தமது பிரச்சாரத்திற்கு பாப் பாடகிகள் உள்ளிட்ட நட்சத்திரங்கிள பயன்படுத்தி வருகிறார். டிரம்பை பொறுத்தவரை நட்சத்திர பிரச்சாரம் இல்லை என்றாலும் அவர் தனது குடும்பித்தினரை பிரச்சாரத்திற்கு பயன்படுத்தி வருகிறார். அதிபர் வேட்பாளர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கி பேசி வருகிறார்கள். அனல்பறக்கும் குற்றச்சாட்டுகளை தெரிவித்து வருகின்றனர். இவற்றை அமைதியாக கவனித்து வரும் அமெரிக்க மக்கள் நாளை தீர்ப்பளிக்க காத்துக்கொண்டிருக்கின்றனர்.