புதுடில்லி: இந்தியா வந்துள்ள இங்கிலாந்து பிரதமர் தெரசா மேயும், பிரதமர் மோடியும், பயங்கரவாதத்திற்கு எதிராக குரல் கொடுத்துள்ளனர்.
இங்கிலாந்து பிரதமர் தெரசா மே, 3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். டில்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். அப்போது இரு தரப்பு உறவுகள் குறித்து விவாதிக்கப்பட்டது. இதன் பின்னர் இரு தலைவர்களும் கூட்டாக பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.
மனித இனம்பாதிப்பு:
அப்போது பிரதமர் மோடி பேசியதாவது: இந்திய பாதுகாப்பு துறையில் உள்ள வாய்ப்புகளை இங்கிலாந்து நிறுவனங்கள் பயன்படுத்த வேண்டும். பயங்கரவாதம் என்பது குறுகிய பாதுகாப்பு சவால்கள் அல்ல என்பதை ஒப்புக்கொண்டோம். இது எல்லை தாண்டி மனித இனத்திற்கு பாதிப்பு ஏற்படுத்துகிறது. எல்லை தாண்டிய பயங்கரவாதம் குறித்து இந்தியாவின் கவலையை தெரசா வி டம் தெரிவித்தேன். பயங்கரவாதத்திற்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். பயங்கரவாதத்தை ஒழிக்க ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். வர்த்தகத்தில் இரு நாடுகளும் இணைந்து செயல்பட ஒரு கூட்டுக்குழு உருவாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.
இங்கிலாந்து ஆசை:
பின்னர் இங்கிலாந்து பிரதமர் தெரசா மே பேசியதாவது: லண்டன் உலகின் தலையாய மையமாக செயல்படுகிறது. வர்த்தக தடைகளை உடைக்க இரு நாடுகளும் தீவிர முயற்சி செய்கிறது. இங்கிலாந்தில் கல்வி கற்க வரும் மாணவர்களை வரவேற்கிறோம். ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினராக இங்கிலாந்து விரும்புகிறது. பயங்கரவாதத்தை முறியடிக்க ஆலோசனை செய்தோம். இணையதள குற்றங்களை தடுப்பதிலும் இணைந்து செயல்பட இரு நாடுகளும் உறுதியாக உள்ளன. பயங்கரவாத செயல்களுக்கு இணையத்தை பயன்படுத்துவதை தடுப்பதிலும் இணைந்து செயல்படத திட்டமிடப்பட்டுள்ளது. இரண்டு வர்த்தக ஒப்பந்ததங்கள் கையெழுத்தாகியுள்ளன. இரு நாடுகளும் தனியாகவும், நட்பு நாடாகவும், சர்வதேச கூட்டாளிகளாகவும் பயங்கரவாத அச்சுறுத்தலை சந்திக்கிறோம் எனக்கூறினார்.