புதுடில்லி: விமானத்தில் பயணித்த மத்திய அமைச்சர் ஜெயந்த் சின்ஹா, தனது இருக்கையை உடல் நலம் முடியாத நபருக்கு விட்டுக்கொடுத்தார். இதற்காக அவரை பலரும் பாராட்டியுள்ளனர்.
உடல்நலக்குறைவு:
நேற்று, பெங்களூருவிலிருந்து கோல்கட்டா வழியாக ராஞ்சி செல்லும் விமானம் சென்றது. இந்த விமானத்தில் கோல்கட்டாவில் இருந்து ராஞ்சி செல்ல மத்திய அமைச்சர் ஜெயந்த் சின்ஹா மற்றும் அவரது மனைவி ஆகியோர் பதிவு செய்திருந்தனர். அதே விமானத்தில், ஸ்ரேயோ பிரதீப் என்பவர், தனது தாயாருடன் பெங்களூருவிலிருந்து ராஞ்சி சென்றார். ஸ்ரேயா தாயாருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், முதல் வகுப்பு பிரிவில் மத்திய அமைச்சருக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் அமர விமான ஊழியர்கள் அனுமதித்தனர். கோல்கட்டாவில் விமானத்தில் ஏறிய மத்திய அமைச்சர் ஜெயந்த் சின்ஹா, ஸ்ரேயோ தாயாரை அந்த சீட்டிலேயே அமர சொல்லிவிட்டு வேறு இடத்தில் சென்று அமர்ந்தார்.
பாராட்டு:
இது தொடர்பாக ஸ்ரேயா பிரதீப் கூறுகையில், "எனது தாயாருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால், மத்திய அமைச்சருக்கு ஒதுக்கப்பட்ட சீட்டில் அமர்ந்தார். மத்திய அமைச்சர் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்காமல், சாதாரண பிரிவில் சென்று அமர்ந்தார். இதற்காக நன்றி தெரிவிக்கிறேன். மத்திய அமைச்சரால் நல்லது நடந்தது" எனக்கூறினார்.