திரையுலகிலும் கருப்புப் பணம் புழங்குவதை நாம் தடுக்க வேண்டும் என்று மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு வலியுறுத்தினார்.
இந்திய சர்வதேச திரைப்பட விழாவை கோவா மாநிலம், பனாஜியில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கிவைத்துப் பேசிய அவர், இதைத் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:
எல்லா இடங்களிலும் கருப்புப் பணம் புழங்குகிறது. இந்த சமூகத்தின் ஒவ்வொரு பகுதியிலும், அரசியலிலும், பொது வாழ்விலும், சினிமாவிலும் கருப்புப் பணம் புழங்குகிறது.
நாம் அமைதியான வாழ்க்கை வாழ வேண்டுமெனில், சிறப்பான எதிர்காலத்தைப் பெற வேண்டுமெனில், இந்த கருப்புப் பணப் புழக்கத்தை ஒழித்தாக வேண்டும்.
பிரதமர் மோடியின் கருப்புப் பண ஒழிப்பு நடவடிக்கை, திரைத் துறைக்கும் சிறப்பு சேர்க்கும். ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்பை பிரதமர் வெளியிட்டவுடன் முதல் ஆதரவுக் குரல் திரைத் துறையில் இருந்து வந்ததைக் கண்டு மகிழ்ச்சியடைகிறேன்.
மோடியின் கருப்புப் பண நடவடிக்கை வெற்றியடைந்துவிட்டது. நியாயமாக சேர்த்த பணத்தை (வெள்ளைப் பணம்) வைத்திருப்பவர்கள் உண்மையிலேயே நன்றாக உறங்குவார்கள்.
ஆனால், கணக்கில் காட்டாத பணம் வைத்திருப்பவர்கள் நிம்மதியாக உறங்க முடியாமல் இருப்பதையும், வெளிப்படையாக புலம்புவதையும் கண்கூடாகப் பார்க்கிறோம். எனவே, நாட்டைத் தூய்மையாக்கும் பணி தொடர்ந்துகொண்டே இருக்கிறது என்றார் அவர்.
English Summary : Cinema black money should be abolished: Venkaiah Naidu.Black cinema that will prevent us from moving money Venkaiah Naidu, Union Information and Broadcasting Minister stressed.