புதுடில்லி: ரயில் விபத்தில் பலியானவர்களுக்கு பிரதமர் மோடி, ரயில்வே அமைச்சகம், உ.பி., அரசு, ம.பி., மாநில அரசுகள்நிதியுதவி அறிவித்துள்ளன.
உத்தர பிரதேச மாநிலம் கான்பூர் மாவட்டம் புகாரியன் அருகே பாட்னா - இந்தூர் விரைவு ரயில் அதிகாலை தடம் புரண்டது. இந்த சம்பவத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 96 ஆக உள்ளது. 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. சம்பவ இடத்தில் மீட்பு பணிகள் துரித கதியில் நடக்கிறது. காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. சம்பவம் குறித்து ரயில்வே பாதுகாப்பு கமிஷனர் தலைமையில் விசாரணை நடத்த மத்திய ரயில்வேத்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. பலியானவர்களுக்கு நிதியுதவி அளிக்க மத்திய மாநில அரசுகள் உத்தரவிட்டுள்ளன.
உத்தர பிரதேச மாநில அரசு ரயில் விபத்தில் பலியானவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளது. படுகாயமடைந்தவர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் வழங்கவும், லேசான காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.25 ஆயிரம் வழங்கவும் உத்தரவிட்டுள்ளது.
பலியானவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.3.5 லட்சம் வழங்கவும், காயமடைந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ.50 ஆயிரம் வழங்கவும் மத்திய ரயில்வே அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
பலியானவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் வழங்கவும், காயமடைந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.50 ஆயிரம் வழங்கவும் மத்திய பிரதேச மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
பலியானவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ. 2 லட்சம் வழங்கவும், காயமடைந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.50 ஆயிரம் வழங்கவும் பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். இந்த தொகை பிரதமரின் தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து வழங்கப்பட உள்ளது.
English Summary:
Prime Minister Narendra Modi to the victims of the train accident, the Ministry of Railways, UP Government, Madhya Pradesh, the state announced funding