பாட்னா : ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை செல்லாது என அறிவித்துள்ள மத்திய அரசின் முடிவால், இந்திய பொருளாதாரம் வலுவடையும் என பிகார் முதல்வர் நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார்.
நாட்டில், கறுப்பு பணத்தை ஒடுக்கும் வகை யிலும், கள்ள நோட்டுகள் புழக்கத்தை ஒழிக்கும் வகையிலும், 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என, பிரதமர் மோடி நேற்று முன்தினம், அதிரடியாக அறிவித்தார். இதற்கு சம அளவில் வரவேற்பும், எதிர்ப்பும் கிளம்பியுள்ளன. காங்., இதனை கடுமையாக எதிர்த்துள்ள நிலையில், பிகார் முதல்வரும் ஐக்கிய ஜனதா தளக் கட்சித் தலைவருமான நிதிஷ் குமார் இதனை வரவேற்றுள்ளார்.
நீண்டகால பயன்:
இதுகுறித்து பாட்னா விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்ததாவது: மத்திய அரசு, 500 மற்றும் 1,000 ரூபாய் கரன்சி நோட்டுகளை செல்லாததாக அறிவித்தது பாராட்டுக்கு உரியது. கருப்புப் பணத்தை ஒழிக்கும் முக்கிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்நடவடிக்கை, நீண்ட கால பயன் அளிக்கும்.
நேர்மறை பலன்கள் :
ஆரம்பத்தில், பொதுமக்களுக்கு சில சிரமங்கள் ஏற்படலாம். இருப்பினும், நேர்மறை பலன்கள் அதிகமாக கிடைக்கும். இந்த முடிவால் நாட்டின் பொருளாதாரம் வலுவடைவதுடன் நீடித்த வளர்ச்சியையும் எட்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.