புதிய ரூ.500, ரூ.1,000 நோட்டுகளில் தேவநாகரி வரி வடிவத்தில் ஹிந்தி எழுத்துகள் இடம்பெற்றிருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் பினோய் விஸ்வம், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார்.
இந்த மனுவை, பழைய ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்புக்கு எதிராகத் தொடுக்கப்பட்டுள்ள பல்வேறு மனுக்களுடன் சேர்த்து உச்ச நீதிமன்றம், வரும் 24-ஆம் தேதி விசாரிக்கும் என்று தெரிகிறது. அவர் தனது மனுவில் கூறியிருப்பதாவது:
ரூபாய் நோட்டு என்பது நாட்டின் பொருளாதாரத்தின் வடிவமாகும். புதிய ரூ.500, ரூ.1,000 நோட்டில் தேவநாகரி வரி வடிவத்தில் ஹிந்தி எழுத்துகள் இடம்பெறச் செய்திருப்பது அரசமைப்புச் சட்டத்தின் 343(1)-ஆவது பிரிவை மீறிய செயலாகும். இதேபோல், 1960-ஆம் ஆண்டின் ஆட்சி மொழிகள் சட்டத்தில், எண்கள் வடிவத்தை மாற்றுவற்கான எந்த அனுமதியும் வழங்கப்படவில்லை.
இதுதவிர, புதிய ரூபாய் நோட்டுகளில் தண்ணீர் பட்டால் சாயம் போவது, பல நாடுகளில் உள்ள பணத்தைப் போன்ற தோற்றத்தில் இருப்பது என்று பல்வேறு குறைபாடுகள் காணப்படுகின்றன என்று விஸ்வம் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
English Summary : The new Rs 500 and Rs 1,000 notes Devanagari text in the form of Hindi characters included protest, the Indian Communist Party National Committee member Binet visvam, the Supreme Court sues.
This petition, old banknotes annulled the declaration waged against the various petitions with the Supreme Court, the It seems that it will be heard on 24th. In his petition, he said,