பழைய, 500 - - 1,000 ரூபாய் நோட்டுகள் செல் லாது என அதிரடி அறிவிப்பை வெளியிட்டார் பிரதமர் மோடி. இதனால் கறுப்புப் பணம் வெளியே வரும் என்றார்.
இந்த திட்டத்தால் பொது மக்களுக்கு பெரும் பிரச்னை ஏற்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகள் இதைப் பெரிதாக்கி பார்லிமென்ட் நடவடிக் கைகளை முடக்கி வருகின்றன.
பார்லிமென்டின் மத்திய வளாகத்தில் கூடும் பா.ஜ., - எம்.பி.,க் கள் மிகவும் சோர்ந்து காணப்படுகின்றனர். மோடியின் திட்டத்தால் பா.ஜ., மீது மக்களுக்கு வெறுப்பு ஏற்பட்டுள்ளது என்கின்றனர் இவர்கள்.
ஆனால், மோடியோ எதைப் பற்றியும் கவலைப்படவில்லையாம். சில நாட்களுக்கு இந்த பிரச்னை இருக்கத்தான் செய்யும்; பிறகு சரியாகிவிடும் என்கிறாராம். அதே போல, பார்லி மென்ட் கூச்சல் குறித்து, எத்தனை நாட்கள் தான் எதிர்க்கட்சிகள் இப்படி கோஷம் போட்டுக் கொண்டே இருக்க முடியும் என, கேள்வி எழுப்புகிறாராம் பிரதமர்.
நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்றப் பாதை யில் கொண்டு செல்ல, எதையும் செய்யத் தயாராக இருப்பதாக மோடி கூறி வருகிறார். சமீபத்தில் ஒரு பொதுக் கூட்டத்தில் பேசும் போது, 'இன்னும் பல திட்டங்கள் என் மனதில் உள்ளன' என, சொல்லியிருக்கிறார்.
அது என்ன புது திட்டம்? அரசியல்வாதிகள், அதி காரிகள் வட்டாரங்களில் சொல்லப்படுவது இது தான்: பிப்ரவரி மாதம் அரசு சமர்ப்பிக்க உள்ள மத்திய பட்ஜெட்டில், வருமான வரியைஒழித்து விடுவராம். அதற்கு பதிலாக இரண்டு வரிகள் இருக்குமாம்.
ஒன்று:- நீங்கள் வங்கி மூலமாக வாங்கும் பொருட்களுக்கு வரி.- இதை, 'பேங்கிங் டிரான் சாக்சன்' வரி என்கின்றனர். இன்னொன்று: சரக்கு மற்றும் சேவை வரி. இந்த புதிய திட்டம் அமல்படுத்தப்பட்டால், பொருளாதாரத்தில்
பெரும் முன்னேற்றம் ஏற்படும் என்பதோடு, வருமான வரி ஒழிந்தால் நடுத்தர வகுப்பினர் மிக சந்தோஷப்படுவர் என்பது பிரதமரின் திட்டம்.
இந்த விவகாரத்தில் இன்னொரு விஷயமும் சொல்லப்படுகிறது. புனேவை சேர்ந்த அனில்
என்பவர் தான் இந்த அதிரடி திட்டத்தை பிரதமருக்கு அனுப்பி வைத்தாராம்.
இவரை நேரில் அழைத்து விவாதித்துள்ளாராம் மோடி. இந்த அனில், ஆர்.எஸ்.எஸ்., அமைப்பைச் சேர்ந்தவராம்.
English Summary:
Old, 500 - - 1,000 banknotes cell latu Action announced that Prime Minister Modi. The money will come out of the black.