பாட்னா:'பழைய,500 - 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது' என்ற, பிரதமர் நரேந்திர மோடியின் அறிவிப்புக்கு, பீஹார் முதல்வர் நிதிஷ் குமார், பாராட்டு தெரிவித்துள்ளது, அவரது கூட்டணி
கட்சிகளான, ராஷ்ட்ரீய ஜனதா தளம் - காங்., ஆகியவற்றுக்கு கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
'மீண்டும், பா.ஜ.,வுடன், நிதிஷ் குமார், கை கோர்த்து விடுவாரோ' என, அந்த கட்சிகளின் தலைவர்கள் பீதியடைந்து உள்ளனர்.
பீஹாரில், ஐக்கிய ஜனதா தளத்தைச் சேர்ந்த, நிதிஷ் குமார் தலைமையிலான கூட்டணி ஆட்சி நடக்கிறது. கூட்டணி ஆட்சியில், லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்., கட்சிகள் அங்கம் வகிக்கின்றன.
நிதிஷ் குமார் தலைமையிலான அமைச்சரவை யில், லாலு பிரசாத் யாதவ் இளைய மகன் தேஜஸ்வி, துணை முதல்வராகவும், மற்றொரு மகன் தேஜ்பிரதாப், சுகாதார அமைச்சராகவும் பதவி வகிக்கின்றனர்.
வாஜ்பாய் தலைமையில் ஐக்கிய ஜனதா தளமும், பா.ஜ.,வும், 18 ஆண்டுகளுக்கும் மேலாக கூட்டணி கட்சிகளாக இருந்தன. பா.ஜ., தலைமையிலான, தே.ஜ., கூட்டணியில், பிரதான கட்சி யாக, நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் இடம் பெற்றிருந்தது. வாஜ்பாய் தலைமையிலான அமைச்சரவையில், நிதிஷ் குமாரும் இடம் பெற்றிருந்தார்.
கடந்த லோக்சபா தேர்தலில், தே.ஜ., கூட்டணி யின் பிரதமர் வேட்பாளராக, நரேந்திர மோடியை அறிவித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, கூட்டணியில் இருந்து வெளியேறினார், நிதிஷ். பா.ஜ.,வை கழற்றி விட்டு, 2014 லோக்சபா தேர்தலை,தனியாக சந்தித்த நிதிஷ் குமாருக்கு, தோல்வி தான் பரிசாக கிடைத்தது.
இதனால், சுதாரித்த அவர், 2015 ல் நடந்த பீஹார் சட்டசபை தேர்தலில், தன் பரம அரசியல் விரோதி யான, லாலு பிரசாத் யாதவுடன் கூட்டு சேர்ந்தார்; காங்கிரசையும் கூட்டணியில் இணைத்தார். எதிர்பார்த்ததுபோலவே, அபார வெற்றி பெற்று, ஆட்சியை பிடித்தார்.
இதற்கு பின், பிரதமர் மோடியின் நடவடிக்கைகளை கடுமையாகவே விமர்சித்து வந்தார் நிதிஷ். ஆனால், தற்போது,கறுப்புப் பணத்தை ஒழிக்கும் வகையில், 500 -- 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என, பிரதமர் அறிவித்த போது, யாரும் எதிர்பாராத வகையில், இந்த நடவடிக்கையை பகிரங்கமாக வரவேற்றார் நிதிஷ்.
'இறக்கும் போது, யாரும், தாங்கள் சேர்த்து வைத்த பணத்தை உடன் எடுத்துச் செல்ல முடியாது. இதெல் லாம் நன்கு தெரிந்தும், சிலர், ஏழு தலைமுறைக்கு தேவையான பணத்தை பதுக்கி வைத்துள்ளனர். இவர்களை ஒழிப்பதற்கு, பிரதமர் எடுத்த நடவடிக் கையை பாராட்டுகிறேன்' என, நிதிஷ் கூறினார்.
இந்த விவகாரத்தில்,ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும், மத்திய அரசுக்கு எதிராக வரிந்து கட்டி செயல்படும் போது, நிதிஷ் மட்டும் ஆதரவு தெரிவித்துள்ளது,
அவரது கூட்டணியில் இடம் பெற்றுள்ள, காங்கிர சுக்கும், ராஷ்ட்ரீய ஜனதா தளத்துக்கும், கடும் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. 'நிதிஷ் குமார், மீண்டும், பா.ஜ.,வுடன் சேர்ந்து விடுவாரோ' என, அந்த கட்சி தலைவர்கள் பீதியில் உள்ளனர்.
பகல் கனவு:
பீஹாரில் அமைந்துள்ள, 'மெகா' கூட்டணியை, உ.பி., உள்ளிட்ட மற்ற மாநிலங்களுக்கும் விரிவு படுத்தி, பா.ஜ.,வுக்கு கடுமையான போட்டியை கொடுக்க திட்டமிட்டிருந்த அந்த கட்சியினர், தங்கள் ஒட்டுமொத்த திட்டமும், பகல்கனவாகி விடுமோ என்ற கலக்கத்தில் உள்ளனர். நிதிஷ் குமாரின் இந்த அதிரடி அரசி யலால், பா.ஜ., தலைவர்கள் உற்சாகமடைந்து உள்ளனர்.
'அரசியல் இல்லை':
ஐக்கிய ஜனதா தளத்தின் பொதுச் செயலர், கே.சி.தியாகி கூறியதாவது:கறுப்புப் பணமுதலை களை ஒழிக்கும் நடவடிக்கைகளை, எங்கள் தலைவர் நிதிஷ் குமார், எப்போதுமே ஆதரித்து வந்துள்ளார்.அதன் ஒரு பகுதியா கவே, பிரதமர் எடுத்துள்ள நடவடிக்கைக்கு, நிதிஷ் குமார் ஆதரவு தெரிவித்து உள்ளார்; இதில், எந்தவித மான அரசியலும் இல்லை. கூட்டணி யில் குழப்பத்தை ஏற்படுத்துவதற் காக, ஒரு சிலர் பரப்பும் பொய் பிரசாரங்களை யாரும் நம்ப வேண்டாம்.
ரூபாய் நோட்டு விவகாரத்தில், மத்திய அரசின் நடவடிக்கையை பாராட்டும் அதே நேரத்தில், இதனால், பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள சிரமங்களை தீர்க்க, போதிய முன்னேற்பாடு களை மத்திய அரசு செய்யவில்லை; இதற்கு, எங்கள் கட்சி சார்பில், கண்டனம் தெரிவித்துள் ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
'பினாமியை ஒழிக்க வேண்டும்':
பீஹார் முதல்வரும், ஐக்கிய ஜனதா தள தலை வருமான நிதிஷ் குமார் கூறியதாவது: எந்த வித அச்சுறுத்தலுக்கும் பயப்படாமல், கறுப்புப் பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையை, பிரதமர் மோடி தொடர வேண்டும். அடுத்ததாக, பினாமி பெயர்களில் சொத்து சேர்த்துள்ளவர்களை கண்டறிந்து, அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்கள் சேர்த்து வைத் துள்ள சொத்துகளை, பறிமுதல் செய்ய வேண்டும்.
நேர்மையாகவும், கடுமையாகவும் உழைக்கும் விவசாயிகள், தொழிலாளர்கள் எல்லாம் சிரமப் படும் போது, கறுப்புப் பணத்தை பதுக்கி வைத் துள்ளவர்கள் மட்டும், வாழ்க்கையை ஜாலியாக அனுபவிக்கின்றனர்;இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
English Summary:
Old, 500 - 1,000 banknotes and void' the Prime Minister Narendra Modi's announcement, Bihar Chief Minister Nitish Kumar, congratulated his coalition
Parties, the Rashtriya Janata Dal - Cong., To the consternation is caused.