சென்னை: வடகிழக்கு பருவமழையால் சென்னையில் காற்று மாசு குறைந்துள்ளதாக தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னையில் வளிமண்டலம் தெளிவாக உள்ளதாகவும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தகவல் தெரிவித்துள்ளது. குறிப்பாக சென்னையின் இடையாறு பகுதி மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் காற்றுமாசு மிகக் குறைவாக உள்ளதாகவும் வாரியம் தெரிவித்துள்ளது.
இதனிடையே, டெல்லியில் கடந்த 5 நாட்களாக காற்று மாசு கடுமையாக சூழ்ந்துள்ளதால் தலைநகர் டெல்லி அடியோடு முடங்கியது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று மக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். முக்கிய மின் நிலையத்தில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. கட்டுமான பணிகளும் நிறுத்தி வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. பள்ளிகளுக்கு தொடர்ந்து விடுமுறை விடவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. எதிரே வருபவர்கள் தெரியாத அளவுக்கு புகை சூழ்ந்துள்ளதால், போக்குவரத்து பல இடங்களில் ஸ்தம்பித்தது.
டெல்லியில் ஏற்பட்ட கடும் புகை மூட்டம் நான்காவது நாளாக நேற்றும் மிகவும் மோசமாக இருந்தது. விடுமுறை தினமாக இருந்தாலும் மக்கள் வெளியே வர முடியவில்லை. பஸ்களும் பல இடங்களில் நிறுத்தப்பட்டன. சில சாலைகளில் போக்குவரத்து தடை செய்யப்பட்டிருந்தது. பெரும்பாலான இடங்களில் புகை மூட்டம் காரணமாக எதிரில் வரும் வாகனங்கள் கூட தெரியவில்லை. அரியானாவில், புகை மூட்டம் காரணமாக ஏற்பட்ட பார்வைக் குறைவினால், அடுத்தடுத்து வந்த 70 வாகனங்கள் ஒன்றோடொன்று மோதியதில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மாசு பாதிப்பு காரணமாக குழந்தைகள், வயதானவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். சுவாசக் கோளாறு சம்பந்தப்பட்ட நோயாளிகள் வரத்து அதிகரித்து இருப்பதாக டெல்லி மருத்துவமனைகள் தெரிவித்து உள்ளன.
பஞ்சாப், அரியானா மாநிலத்தில் பயிர்க் கழிவுகள் எரிக்கப்படுவதால் டெல்லியை அடர்த்தியான போர்வையாக புகை சூழ்ந்துள்ளது. மாசு நிலைமையை அனுசரித்து, வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். காற்று உறிஞ்சும் கருவி (வேக்குவம் கிளீனர்) மூலமாக 10ம் தேதியில் இருந்து சாலைகளில் துப்புரவு பணிகள் நடத்தப்படும். திறந்தவெளி மற்றும் குப்பை கிடங்குகளில் குப்பை எரிப்பதை உடனடியாக அணைக்கும்படி மாநகராட்சிகளுக்கு அறிவுறுத்தபப்ட்டு உள்ளது.