500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பால் ஏழை, எளிய மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அரியலூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்திற்கு அக்கட்சியின் மாவட்ட செயலாளர் உலகநாதன் தலைமை வகித்தார். ரூபாய் நோட்டுகள் தொடர்பாக மத்திய அரசின் நடவடிக்கைகளால், எழை எளிய மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பபட்டன.
பொதுமக்கள் பாதிக்காத வகையில் புதிய 2000ரூபாய் நோட்டுகளுக்கு பதிலாக சில்லறை நோட்டுகளை அதிகளவில் வழங்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. ஆர்பாட்டத்தில் ஏராளமான கம்யூனிஸ்ட் கட்சியினர் கலந்துக் கொண்டனர்.
திருவாரூர் பேருந்து நிலையம் அருகே இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பழனிசாமி தலைமையில் போராட்டம் நடைபெற்றது.
இதேபோன்று திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு, கூட்டுறவு வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கூட்டுறவு வங்கிகளுக்கு நேரடியாக ரிசர்வ் வங்கி, பணத்தை வழங்க வேண்டும் என முழக்கங்கள் எழுப்பபட்டன.
English summary:
If the announcement is not valid banknotes and 500 thousand poor people protested statewide CPI is affected.