ஆண்டிபட்டி : ஆண்டிபட்டி அருகே பளியர் இன மக்கள் அடிப்படை வசதி இன்றி சிரமப்பட்டு வருகின்றனர். தங்களுக்கு தேவையான வசதிகளை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர். ஆண்டிபட்டி வட்டம், கடமலை - மயிலை ஒன்றியத்தில் கடமலைக்குண்டு ஊராட்சிக்கு உட்பட்ட கரட்டுப்பட்டி உள்ளது. இங்குள்ள 12வது வார்டில் பளியர் இன மக்களுக்காக தமிழக அரசு சார்பில் வெள்ளிமலைக்கு செல்லும் சாலைப்பகுதியில் அடிவாரத்தில் கடந்த 2006-07ல் 31 தொகுப்பு வீடுகள் கட்டி தரப்பட்டன. ஆரம்பத்தில் நல்ல நிலையில் இருந்த இந்த வீடுகள் தற்போது போதிய பராமரிப்பின்றி சேதமடைந்துவிட்டன. மேலும் இங்குள்ள அடிப்படை வசதிகளும் ஒவ்வொன்றாக காலியாகிவிட்டன. குறிப்பாக ரேஷன் அட்டை, ரேஷன் அரிசி இதுவரை கிடைக்கவில்லை என பளியர் இன மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
செல்வம் (51) என்பவர் கூறுகையில், ‘‘நாங்கள் பரம்பரை பரம்பரையாக மேற்கு தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியான மேகமலை வெள்ளிமலை போன்ற மலையில் குடும்பங்களுடன் சந்தோசமாக வாழ்ந்து வந்தோம். வனத்துறையினர் மற்றும் தமிழக அரசின் வேண்டுதலின்படி நாங்கள் குடும்பத்துடன் மலைகளை விட்டு விட்டு தரை பகுதியில் உள்ள இந்த வீடுகளில் குடியேறினோம். ஆரம்பத்தில் தண்ணீர் வசதி மின்சார வசதி இருந்தது. தற்போது எந்த ஒரு அடிப்படை வசதிகளும் இல்லை. குடிநீருக்கு நீண்ட தூரம் சென்று வர உள்ளது. மழைக் காலங்களில் வீடுகளின் மேற்கூரையின் வழியாக தண்ணீர் வடிகிறது. வீடுகளில் பராமரிப்பு வேலைகள் செய்வதற்கு அரசு உதவி செய்வது இல்லை. ரேஷன் அரிசி எங்களுக்கு இன்று வரை இல்லை. நாங்கள் சாப்பாட்டுக்கு எங்கு போவோம்.
மலைகளில் மழை பெய்யாததால் உணவிற்காக மலைகளில் ஒன்றும் இல்லை. குடிநீருக்காக போடப்பட்ட தண்ணீர் டேங்கையே காணவில்லை. மின் மோட்டாருக்காக போடப்பட்ட மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இங்குள்ள அனைவருக்கும் குடும்ப அட்டை, ஆதார் அட்டை இல்லை. ஒரு சில நபர்களுக்கு ஓட்டே இல்லாமல் இருக்கிறது. எங்கள் குழந்தைகள் பள்ளியில் படித்து வருகிறார்கள். அவர்களுக்கு ஜாதி சான்றும் இல்லை. நாங்கள் பலமுறை சம்மந்தப்பட்ட அலுவலர்களிடம் மனுகள் கொடுத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை. நாங்கள் நிம்மதியாக மலைகளில் வசதித்து வந்தோம். ஆனால் தற்போது தமிழக அரசு இங்கு வசித்து வரும் சுமார் 31 குடும்பங்களை புறக்கணிப்பது போன்று தெரிகிறது. எனவே அரசும், மாவட்ட நிர்வாகமும் எங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும்’’ என்றார்.