புதுடில்லி:ஜி.எஸ்.டி., எனப்படும், சரக்கு மற்றும் சேவை வரி மீதான நிர்வாக அதிகாரம் குறித்து மத்திய, மாநில அரசுகள் இடையே நடந்த பேச்சில், சுமுக முடிவு ஏற்படாமல் இழுபறி தொடர்கிறது.
நாடு முழுவதும், ஒரே சீரான வரி விதிப்பை அமல்படுத்தும் நோக்கில், பார்லிமென்டில் ஜி.எஸ்.டி., மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த வரி விதிப்பு, அடுத்த ஆண்டு ஏப்., முதல் அமல்படுத்தப் படும் எனக் கூறப்பட்டு உள்ளது. இதற்கிடையே, ஜி.எஸ்.டி., வரி செலுத்துவோ ரில் குறிப்பிட்ட வருமான வரம்புக்கு உட்பட் டோர், யார் கட்டுப்பாட்டில் வருவர் என்பது குறித்து மத்திய, மாநில அரசுகள் இடையே இணக்கம் ஏற்படவில்லை. இந்த பிரச்னைக்கு தீர்வு காணும் நோக்கில், மாநில அரசுகளின் நிதியமைச்சர்களுடன், மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி நேற்று பேச்சு நடத்தினார்.
அப்போது, 1.5 கோடி ரூபாய்க்கு கீழ் வர்த்தகம் செய்யும் நிறுவனங்களின் மீதான அதிகாரத்தை விட்டுக் கொடுக்க, தமிழகம், மேற்கு வங்கம், கேரளா, உத்தரகண்ட், உ.பி., உள்ளிட்ட மாநில அரசுகளின் நிதி யமைச் சர்கள் சம்மதிக்கவில்லை. இதனால், நேற்றைய பேச்சு இழுபறியில் முடிந்தது.
சக்தி வாய்ந்த அமைப்பாக கருதப்படும், ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டம், 25ல் நடக்கவுள்ளது. அதற்கு முன், வரி செலுத்துவோர் மீதான அதிகார வரம்பு குறித்து முடிவு செய்துவிட வேண்டும் என்ற எண் ணத்தில், இன்று மீண்டும் மத்திய, மாநில நிதிய மைச்சர்களின் கூட்டம் நடக்கும் எனத் தெரிவிக் கப்பட்டுஉள்ளது.
பிரச்னை என்ன?
நேற்றைய கூட்டத்துக்கு பின், உத்தரகண்ட் மாநில நிதியமைச்சரும், காங்கிரசை சேர்ந்த வருமான இந்திரா ஹிருதயீஷ், நிருபர்களிடம் கூறிய தாவது:ஆண்டுக்கு, 1.5 கோடி ரூபாய் மற்றும் அதற்கு கீழ் வர்த்தகம் செய்யும் நிறுவனங்கள்
மீதான, சரக்கு மற்றும் சேவை வரி திகாரம் முழுமையாக தரப்பட வேண்டும் என, மாநில அரசுகள் வலியுறுத்துகின்றன.
இதில், சரக்கு மீதான கட்டுப்பாட்டை விட்டுத் தர, மத்திய அரசு சம்மதித்தாலும், சேவை மீதான அதிகாரத்தை விட மறுக்கிறது. அதே சமயம், மாநில அரசுகள் இந்த விஷயத்தில் வருவாயை இழக்க விரும்பவில்லை.
சி.ஜி. எஸ்.டி., மற்றும் ஐ.ஜி.எஸ்.டி., மசோதாக் கள் நிறைவேற வேண்டுமானால், மாநிலங் களின் கோரிக்கையை மத்திய அரசு ஏற்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.n
English Summary:
GST., Known as the administrative authority of the federal Goods and Services Tax, the talks between the state governments, the relaxed tug continues without end.